உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

113

என்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, டகரம் புரைசலோடு சேர்த்திருப்பதனால் இதன் சரியான வடிவம் தெரியவில்லை. இதை எட்டிய்' என்று படிக்கலாம்.

இரண்டாவது சொல் ஊர் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. மூன்றாவது சொல் அரிதின என்பது. இதை அரிதின் என்று படிப்பதை விட அரிதின என்று படிப்பதே சரி என்று தோன்றுகிறது. அரிதின என்பது அரிதியின் உடைய என்றும் பொருள் உள்ளது. அ என்பது உடைய இ அது என்னும் ஆறாம் வேற்றுமை உருபுச் சொற்கள். பாளி என்பது பாழி என்னும் பொருள் உள்ள சொல். எட்டியூர் அநிதியி னுடைய பாழி என்பது இதன் வாக்கிய அமைதி. எட்டியூரில் வாழ்ந்த அரிதி என்பவர் இந்தப் பாழியை (குகையை)க் கொடுத்தார் என்பது கருத்து.

1.

அடிக்குறிப்புகள்

Annual Report on South Indian Epigraphy for 1912 Plate facing p. 57.

2. Proceedings and Transactions of the First All Indian Oriental Conference p. 208 - 217 Poona 1919.

3. Proceedings and Transactions of the Third All Indian Oriental Conference, Madras, 1924.

4. New India Antiquary Vol. I.

5.

P. 63 Seminar on Inscriptions 1966.

6. P. 213 Early South Indian palaeography.