உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

கடைசி இரண்டு எழுத்துக்கள் ‘பாளி' என்பது, என்று இவர் விளக்கங் கூறியுள்ளார்.?

2

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்:

எட்டுய ரூர அரிதின் பாளி'

முதல் சொல்லின் இறுதியில் ன் சேர்ந்து எட்டியூரன் என்று படித்து 'எட்டியூர் அரிதின் என்பவருடைய குகை' என்று விளக்கங் கூறியுள்ளார்.3

திரு. நாராயண ராவ், ‘எட்டு யார ஹாரீ தானாம் பாலி-(கி?)' என்று சமற்கிருதப்படுத்தி எழுதினார்.

4

திரு. ஐராவதம் மகாதேவன், வலப் பக்கத்து இரண்டாம் எழுத்தை ழை என்று படித்துள்ளார். (இவ்வெழுத்துடன் கலந்துள்ள புரைசல் இவ்வாறு கருதும்படி இருக்கிறது) இவர் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறார்:

'எழை ஊர் அரிதின் பாளி'

‘எழையூர் அநிதி என்பவருடைய ஆசிரமம்’5 திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள், 'எட்டுய உர அரிதித பாளி’ என்று படித்து ‘(எ)ட்டு யூர் அரிதின் பாளி' என்று சொல் பிரித்து, 'எட்டுயூர் (எட்டியூர்) அரிதின் (ஹரித என்பவரின்) படுக்கை' என்று பொருள் கூறுகிறார்.6

இந்தக் கல்வெட்டின் வலப்புறத்து இரண்டாவது எழுத்து புரைசலுடன் கலந்து தெளிவாகத் தெரியவில்லை. இதை வட்டவடம் என்று கொண்டு சமற்கிருத இரண்டாவது ட்ட என்னும் எழுத்து என்று கருதினார். திரு. கிருட்டிண சாத்திரி. திரு. ஐ. மகாதேவன் இதை ழை என்று கொண்டார். இது தமிழ் டகர எழுத்து. இதை,

எ டய் ஊர் அரிதின பாளி

என்று படிக்கலாம். எடய் என்பது எட்டிய் என்று இருக்க வேண்டும். டகரம் இரட்டித்து ட்டி என்று இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இப்படிக் கருதுவதற்குக் காரணம் இதனொடு யகரமெய்(ய்) சேர்ந்திருப் பதுதான். இகர ஈற்றுச் சொற்களின் இறுதியில்(ய்) யகரமெய் சேர்த்து அக்காலத்தில் எழுதப்பட்டிருப்பதை வேறு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் பார்க்கிறோம். ஆகவே, இந்த முதற் சொல் எட்டி