உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

117

இவர் தான என்பது தானம் (கொடை) என்னும் சொல்லாகக் கொண்டார். அந்தை என்பதை அந்தை என்று கொண்டு, அது படுக்கை என்னும் பொருள் உள்ள சொல் என்று கூறுகிறார். அந்தை என்பது ‘எண்ட’ என்னும் சிங்கள மொழிச் சொல் என்று கூறுகிறார். அந்தை என்பதை ஆந்தை என்றும் கொள்ளலாம். எயின் ஆந்தை, பிசிர் ஆந்தை, அஞ்சில் ஆந்தை முதலான (அகப்பாட்டுப் பாடியவர்) பெயர்களைப் போல என்று கூறுகிறார். தன், தான், என்பதை கீரத்தன், விண்ணத்தார் என்பது போலவுங் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

திரு. நாராயணராவ் இந்த எழுத்துக்களைப் பிராகிருத பாஷையாகப் படித்துப் பிறகு அதைச் சமற்கிருதமாக்கிப் பொருள் கற்பிக்கிறார்.

1. பொதின 'ஹ அ தான (பிராகிருதம்) பொதின ஊரஸ்ய தானானி (சமற்கிருதம்) போதின ஊர என்னும் கிராமத்தாரின் தானம்.

2,3. குவிரா அன தை (பிராகிருதம்) குபேரானாம் தேயம் (சமற் கிருதம்) குபேரன் என்னும் பெயருள்ள இனத்தார் செய்த தானம்.

4,5. திடேரயிள அ தான (பௌத்த பிக்கு பிக்குணிகளு க்குக் கொடுக்கப்பட்ட தானம்)

5,6. அரிய தி அந்தை (பிராகிருதம்) ஆர்ய ஸ்தீரிணாம் தேயம் (சமற்கிருதம்) கணவன் - மனைவி கொடுத்த தானம்.

6,7. இரவாதனா மதிரா அந்தை (பிராகிருதம்) இராவதானாம் மாத்ருனாம் தேயம் (சமற்கிருதம்) இரவாத என்னும் பிரிவினரின் தாய்மார் செய்த தானம்.

7,8. விஸுவானா சானதானா தை (பிராகிருதம்) விஸ்வானாம் ஜானபதானாம் தேயம் (சமற்கிருதம்) (எல்லா கிராமத்தாரு டையவும் தானம்)

8,9. சான தானா அந தெ (பிராகிருதம்) ஜானபதானாம் அந்யத் தேயம் (சமற்கிருதம்) (கிராமத்தாருடைய இன்னொரு தானம்)

9. வென தாத் தானா (பிராகிருதம்) விநதாயா தானம் (சமற்கிருதம்) வினதாவினுடைய (அல்லது ஒரு பக்தருடைய) தானம். திரு. டி.வி. மகாலிங்கம் இவ் வெழுத்துக்களை இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.3