உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

123

தொண்டிலிருக்கும் உபாசகன் இளவன் கொடுத்த பள்ளி என்பது இதன் பொருள்.5

இதை நாம் படித்துப் பொருள் காண்போம். தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களைச் சரிசெய்தால் இந்த எழுத்துக்கள் இவ்வாறு அமைகின்றன:

ஊ பா ச அ னதண்டுலா வ ன கொ டு பளி ஈ

இதை இவ்வாறு பதம் பிரிக்கலாம்: உபா ச அன் தண்டுலாவன் கொடு பளிஇ. உபாசகன் ஆன தண்டுலா வன் (முனிவர்களுக்குக்) கொடுத்த பள்ளி என்பது இதன் பொருள்.

விளக்கம், ஊபாசஅன். இதை ஊபாசான் என்று படிக்கலாம். இதன் சரியான வாசகம் உபாசகன் என்பது. உகரத்துக்கு ஊகாரம் இடப் பட்டுள்ளது தவறு. சகர எழுத்துக்குப் பக்கத்தில் அகரம் சேர்த்து எழுதப் பட்டிருக்கிறது. இது சா என்று எழுதப்பட வேண்டும். அஃதாவது உபாசான் என்று இருக்க வேண்டும். இப்படி எழுதுவதும் பிழை. உபாசகன் என்று எழுதப்பட வேண்டும். உபாசகர் என்பது பௌத்த- சைன மதத்து இல்லறத்தாரின் பெயர். தண்டுலாவன் என்பது ஓர் ஆளின் பெயர். இஃது இந்தப் பள்ளியைத் தானஞ் செய்தவரின் பெயர். கொடு என்பது கொடுத்த என்றிருக்க வேண்டும். பளிஇ என்பது பள்ளி என்பதன் இடைக்குறை. பளிஇ என்று எழுதப்பட்டிருப்பதும் தவறு. பளிய் என்று எழுதப்பட வேண்டும். இகர ஈற்றுச் சொற்களின் இறுதியில் யகர மெய் சேர்த்து எழுவது அக்காலத்து வழக்கம். பளிய் என்று எழுதாமல் பளிஇ என்று எழுதியிருப்பது தவறு. சரியாக எழுதத் தெரியாத ஓர் ஆள் இதை எழுதியிருக்கிறான் என்பது தெரிகிறது.

அடிக்குறிப்புகள்

1. Proceedings and Transactions of the First All India Oriental Conference, Poona

1919.

2. Proceedings and Transactions of the Third All India Oriental

Conference, Madras 1924.

3. Proceedings and Transactions of the 10th All India Oriental

Conference, Tirupati, 1940. New Indian Antiquary Vol. 1. pp. 362-76.

4. Early South Indian Palaeography, p. 216 - 217.

5. Seminar on Inscriptions, 1966, P. 61.