உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. மருகால் தலை பிராமி எழுத்து

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே பத்துக் கல் தூரத்தில் மருகால்தலை கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் பூவினுடையார்மலை என்னுங் குன்றின்மேல் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட சில சிறு கோயில்கள் இருக்கின்றன. இந்தக் குன்றின் இன்னோர் இடத்தில் இயற்கையாக அமைந்த பொடவு (குகை) ஒன்றிருக்கிறது. இந்தப் பொடவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வசித்திருந்த பெளத்த முனிவர்களுக்காக அமைக்கப்பட்ட கல்படுக்கைகள் காணப்படுகின்றன. இந்தக் குகை வாயிலின் மேற்புற நெற்றியில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த இந்தப் பிராமி எழுத்து 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூற்றாண்டு களாக மறைந்து கிடந்த பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் முதல் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டெழுத்து இதுவே. இது சாசனத் தொகுப்பில் 1906ஆம் ஆண்டு 407ஆம் எண்ணாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.' சாசன இலாகாவில் 1907ஆம் ஆண்டு அறிக்கையில் 60ஆம் பக்கத்தில், இது 'அசோகன் சாசன எழுத்துக்களைப் போன்ற எழுத்தில் பாலி மொழி சாசனம்’ என்று கூறப்படுகிறது.2 இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டு பாலி மொழியில் எழுதப்பட்டது என்று கருதியபடியால் இதைப் பல ஆண்டுகளாகப் படிக்காமலே வைத்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது தமிழ்மொழிக் கல்வெட்டு என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

இந்த எழுத்துக்கள் ஒரே வரியில் பதினொரு எழுத்துக்களைக் காண்டது. இந்த எழுத்துக்களின் அளவு, 1 அடி முதல் 1 அடி 3 அங்குலம் வரையில் உள்ளது. இதன் வரி வடிவம் இது:

UK t

няють