உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

125

இந்த எழுத்தின் நான்காவது எழுத்து பிராகிருத ஸி என்னும் எழுத்து. மற்ற எழுத்துக்களெல்லாம் தமிழ் எழுத்துக்களே.

திரு. எச். கிருட்டிணசாத்திரி இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு படித்தார்:3

'வே ண கோ ஸி பானா கு டு பி தா கா) (ளா) கா ஞ ச ணா ன’

கோஸிபானா என்பதை காஸ்யபானாம் என்னும் சமற்கிருதச் சொல்லோடு ஒத்திருக்கிறது. குடுபிதா என்பது கொட்டுவித்தான் (வெட்டினான்) என்னும் பொருள் உள்ள சொல். கோஸிபானா என்பதில் கோ என்னும் எழுத்து ஸி போலக் காணப்படுகிறது.

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்:4

வேண் கோஸிபான் குடுபிதா காள காஞ்சனம்.

வேண் நாட்டு காஸ்யபன் (அல்லது வேளிர் தலைவன் காஸ்யபன்). கொத்துவித்த சுப முள்ள (அல்லது கல்லினாலான) ஆசிரமம்.

காள என்பது கல்ய என்னும் சமற்கிருதச் சொல். இது மங்கலம் என்னும் பொருள் உள்ளது. இதற்குக் கல் என்றும் மலை என்றும் பொருள் கொள்ளலாம். குடுபிதான் என்பதிலுள்ள குடு என்பது கொட்டு (அறு) என்னும் பொருள் உள்ளது. காஞ்சனம் என்பது பொதுவாகப் பொன் என்னும் பொருளுடையதானாலும் இங்கு ஆசிரமத்தைக் குறிக்கிறது.

திரு. சி. நாராயண ராவ் இதைப் பிராகிருதமாகப் படித்துப் பிறகு அந்தப் பிராகிருதத்தைச் சமற்கிருதமாக்குகிறார்.5 அவர் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்:

'வேண கோஸிபான குட்டுபிதா காள காஞ்சனம்' (பிராகிருதம்) 'வேணாகி ஸிபான குட்டுபிதா கால காஞ்சனம்' (சமற்கிருதம்)

பௌத்த விநய பிடகத்தைச் சேர்ந்த (அல்லது வேணாகி வேநாயகி என்னும் பெயரையுடைய) சில்பி குலத்தைச் சார்ந்த ஒரு பெண் மகளால் செய்விக்கப்பட்ட கல்கால காஞ்சனம்?

திரு.டி.வி.மகாலிங்கம் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்:6 வேண் கோஸிபன் குட்டுபித கல் கஞ்சனம்.