உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

வேள் + கோஸிபன் = வேண் கோஸிபன் என்றாயிற்று. வேள் என்பதற்குத் தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம். இச் சொல்லுக்கு யாகன் என்னும் பொருளும் உண்டு. பிற்காலத்துச் செவிவழிச் செய்தி, வேள் அல்லது வேளிர் என்பவர் வேள்வித் தீயிலிருந்து தோன்றியவர் என்று கூறுகிறது. குடுபித என்பது குடுப்பித்த அல்லது கொடுப்பித்த என்னுஞ் சொல்லாகும். கல்+கஞ்சனம் என்பதை கல் +கஞ்+சணம் என்று பிரிக்கலாம். கம்+சணம்+கஞ்சணம். கம் என்பதன் பொருள் கம்மியர்; கம்மாளர் என்பது. சணம் என்பது படுக்கை என்னும் பொருளுள்ள சயனம் என்னும் சமற்கிருதச் சொல்.

உறையுள் அல்லது படுக்கை கல்லினால் அமைக்கப்பட்டு வேண் கோஸிபனால் தானமாகக் கொடுக்கப்பட்டது என்பது இதன் கருத்து.

திரு. ஐ. மகாதேவன் இதை இவ்வாறு வாசித்துள்ளார்: வேண் காஸிபன் கொடுபித கல் கஞ்ச ணம்.

வேள் காஸிபனால் கொடுக்கப்பட்ட கல்படுக்கை.

இதில் திரு. சி. நாராயண ராவ் படித்துப் பொருள் கூறுவது முழுவதும் பொருத்தம் இல்லாதது என்பது நன்றாகத் தெரிகிறது.

திரு. எச். கிருட்டிண சாத்திரி, குடுபிதா என்பது கொட்டு வித்தான் (வெட்டுவித்தான்) என்று பொருள் கூறுவது ஏற்கத்தக்கதன்று.

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர், வேண் கோஸிபன் என்பதற்கு வேண் நாட்டுக் காஸ்யபன் என்றும் வேளிர் தலைவன் என்றும் இரு வகையாகப் பொருள் கூறுவது ஏற்கத்தக்கதன்று. காள என்பதற்குச் சுபமுள்ள என்றும் கல்லினால் செய்த என்றும் பொருள் கூறுவதும் ஏற்கத்தக்கதன்று. காள என்பது கல்ய என்னும் சமற்கிருத மொழிச் சொல் என்றும் மக்கலம் என்னும் பொருள் உள்ளது என்றும் கூறுவது பொருத்தமற்றவை. என்பது கொட்டு (அறு) என்று பொருள் கூறுவது பொருத்தமற்றது.

திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள், வேண் கோசிபன் என்பதை வேள்+கோசிபன் = வேண்கோசியன் என்றாயிற்று என்று கூறுவது புதுமையாக இருக்கிறது. வேள்+கோசிபன் = வேட்கோசிபன் என்றாகுமே யல்லால் வேண்கோசிபன் என்று ஆகாது. வேள்+கோ = வேட்கோ என்றாவது போல் வேள் + கோசிகன் = வேகோசிகன் என்று ஆகும். வேண்கோசிகன் என்றாகாது. ஆகவே இவர் கூறுவது தவறு. வேள்