உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

எழுதியுள்ளார். ட்டு என்று இரட்டிக்க வேண்டும். இரட்டி இரட்டிக்காமல் தவறாக எழுதியுள்ளார். வேறு இடத்திலும் ட்டு என்பது டு என்று எழுதப்பட்டிருக்கிறது. டு என்பதை ட்டு என்று அக்காலத்தில் ஒப்பித்தார்கள். போலும். ஈழ என்பது இழ என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்திலும் தமிழ்நாட்டவர் ஈழ நாட்டுக்குப் போய் வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் குடும்பிகர் என்று கூறப்பட்டனர். ஈழத்துப் பூதன்தேவனார் பாண்டி நாட்டிலிருந்து ஈழஞ் சென்றவர். அவர் பாடியவை சங்கச் செய்யுள்களில் தொகுக்கப் பட்டுள்ளன. எருகாட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலையன் என்பவன் (குகையையும் கற்படுக்கைகளையும் திண்ணைகளையும் செய்வித்தான்) என்று வாக்கியம் முடிய வேண்டும். செய்வித்தான் என்னும் வினைச் சொல் விடுபட்டுள்ளது.

ன்

இரண்டாவது வாக்கியத்தில் செய்தா என்றிருக்கிறது. இது செய்தான் என்று இருக்க வேண்டும். ன் விடுபட்டுள்ளது. ஆய் சயன் நெடு சாதன் என்பது செய்தவனுடைய பெயர். இப் பெயரில் நெடு சாதன் என்பதும் தவறாக எழுதப்பட்டுள்ளது. சாதன் என்பதில் த்த என்னும் சகரம் இரட்டித்து சாத்தன் என்று எழுதப்பட வேண்டும். சாத்தன் என்னும் பெயர் சங்க காலத்தில் பரவலாக வழங்கி வந்தது. நெடுஞ்சாத்தன் என்னும் பெயரும் வழங்கி வந்தது.

இந்தக் குகையிலேயே வேறு இடத்தில் தனியே பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பொருள் தெரியவில்லை. எதையோ எழுதத் தொடங்கி முற்றுப்பெறாமல் விடுபட்டு எழுத்துக்கள் என்று தோன்றுகின்றன. அவை:

tu

1. (கய)

2.(மாரயவ)

O