உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

135

‘எருகோட்டூர் ஈழ-குடும்பிகன் போலாலையன் செய்த ஆய்- சயன-நெடு-சாத ன(ம்)'

இதன் கடைச் சொல்லாகிய சாதன என்பது தியானம் என்னும் பொருள் உள்ள சமற்கிருதச் சொல். நெடு என்பது நீண்ட, ஆழ்ந்த என்னும் பொருள் உள்ளது. நெடு சாதன என்பதன் பொருள் ஆழ்ந்த தியானம் என்பது. சயன என்பது படுக்கை. ‘ஆய்வை’ என்பது உறங்கும் இடம் என்று பிங்கலந்தை நிகண்டு கூறுகிறது. 'ஆய் என்னுஞ் சொல் தாலாட்டுப் பாட்டிலும் வருகிறது. 'லொல் லொல் லொல் லொல் ஆயி' என்னும் தாலாட்டுப் பாட்டில் ‘ஆயி' என்பது தூங்கு என்னும் பொருள் கொண்டது. எனவே, ‘ஆய்-சயன-நெடு சாசன (ம்)' என்பதன் பொருள், 'தூங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்வதற்கும் அமைக்கப்பட்ட படுக்கை' என்பது. 'இலங்கை' (ஈழம்) யிலிருந்து வந்து எருகோட்டூரில் வசிக்கும் சிக்கும் குடும்பிகனான போலாலையன் உறங்குவதற்கும் ஆழ்ந்த தியானம் செய்வதற்கும் அமைத்தான் என்பது இதன் கருத்து. அகநானூற்றில் 149, 319, 357 ஆம் செய்யுள்களைப் பாடிய தாயங்கண்ணனார் எருக்கோட்டூரைச் சேர்ந்தவர்.6

இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம். இந்த கல்வெட்டெழுத்துக்கள் பெரிய எழுத்தினாலும் சிறிய எழுத்தினாலும் எழுதப்பட்டு இடையே செங்குத்தான கோட உள்ளதென்று முன்னமே கூறினோம். இந்த வாக்கியத்தை எழுதியவர் சரியாகத் தமிழ் படிக்காதவர் என்பதும் பேச்சுத் தமிழில் இதை எழுதியுள்ளார் என்பதும் இந்த வாக்கிய அமைப்பினால் அறிகிறோம்.

எரு கா டூர் இழ குடும்பிகன் பொலாலையன் (பெரிய எழுத்து)

செய்தா ஆய்சயன் நெடு சாதன். (சிறிய எழுத்து)

பெரிய எழுத்து தனி வாக்கியம். சிறிய எழுத்து தனி வாக்கியம் என்று தெரிகிறது. எருகாட்டூர் ஈழக்குடும்பிகன் (வாணிகன்) பொலாலையன் இந்தக் குகையை முனிவர்களுக்குத் தானஞ் செய்தான். குகையின் கற்படுக்கைகளைச் செய்து அமைத்தவன் ஆய்ச்சயன் நெடுஞ்சாத்தன் என்பது இவ் வாக்கியங்களின் கருத்து.

விளக்கம்: இதை எழுதியவர் நன்றாகப் படிக்காதவர் என்றும் பேச்சுத் தமிழில் எழுதியுள்ளார் என்றும் கூறினோம். எருகாட்டூர் என்று

6