உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

1. எரு கோட்டூர) இ ஜம் கு டு ம (பிக) னா போ லா வ ச னா

2.ச (ஏ) ய தா ஆயசாயனா னை ய சா ய னா னை டு ச(சா) த னா எருகோட்டூர என்பது எருகோட்டூர். குடும்பிகன் என்பது இல்வாழ்வோனைச் சுட்டுகிறது.2

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படிக்கிறார்: ‘எருகோட்டூர் ஈழ குடும்பிகன் போலாலையன் செய்தா ஆய்ச்சுடன் நெடுசாதன்'

எருகோட்டூர் என்பது ஊரின் பெயர். அகநானூற்றில் தாயங்கண்ணனார் செய்யுளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவருடைய ஊர் எருக்கோட்டூர். இழம் என்பது ஈழம். செய்தா என்பது செய்தான் என்னுஞ் சொல். ஈழத்தைச் சேர்ந்தவனுடைய எருக்கோட்டூரில் வசித்தவனுமான போலாலையன் செய்வித்தான். ஆய்ச்யன் நெடுஞ்சாத்தன் செய்தான் என்பது பொருள்.3

திரு. சி. நாராயண ராவ் இவ்வெழுத்துக்களை வழக்கம்போலப் பிராகிருதமாகப் படித்து அதைச் சமற்கிருதமாக மாற்றுகிறார்:

1. ‘எருகோடூர ஈழ குடும்பிகனா போலாலையனா சேய்தா’ ஆய-சயனா நெடுசாதனா (பிராகிருதம்)

2.எருகோடீர் ஸிம்ஹௗ-குடும்பி-கானாம் போலால்-

ஆர்யானாம் சய்த்ய-கய்யானாம்-நிஷ்ட்டா சைத்யானாம்.

(சமற்கிருதம்)

இலங்கையில் வசிப்பவரும் எருக்காட்டூர் வாசிகளுமான போல நகரத்தார் சைத்தியங்களை நிறுவினார்கள் என்பது பொருள்.4 திரு.ஐ. மகாதேவன் இவ்வாறு கூறுகிறார் :

எரு காட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலையன் செய்தா ஆய் சயன் நெடு. சாதன்'

இலங்கையிலிருந்து வந்த எருகாட்டூர் பொலாலையன் இதைக் கொடுத்தான். ஆய், சயன், நெடுசாதன் ஆகிய இயவர்கள் (இதைச் செய்தார்கள்).5

திரு. டி.வி. மகாலிங்கம் படித்து இவ்வாறு பொருள் கூறுகிறார்: