உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

133

குகை வாயிலின் மேலேயுள்ள பாறையிலிருந்து மழைநீர் குகைக் குள்ளே விழாமல் பக்கங்களில் வழிந்து போகும்படிகுழைவான தூம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. குகைக்கு அருகில் குளிர்ந்த நீருள்ள சுனை இருக்கிறது.

குகையின் உள்ளே பாறைகளைச் சமப்படுத்தி வழவழப்பாக்கி அமைத்துள்ள கற்படுக்கைகள் இருக்கின்றன. கற்படுக்கைகளின் தலையணைப் பக்கமாகப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குகைக்குள்ளே இரண்டு திண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு திண்ணை ஐந்து அடி நீளமும் ஒன்றே முக்காலடி உயரமும் உள்ளது. இன்னொரு திண்ணை, ஆறு அடி நீளமும் மூன்று அடி உயரமும் உள்ளது.

இந்தக் குகையின் வடக்கு பக்கத்தில் இன்னொரு சிறு குகையும் அதற்குள் இரண்டு கற்படுக்கைகளும் உள்ளன. இக்குகையில் கல்வெட்டெழுத்து இல்லை.

பெரிய குகையில் கற்படுக்கைமேல் எழுதப்பட்டுள்ள பிராமிஎழுத்தைப் பார்ப்போம் இவை 1908 ஆம் ஆண்டுகண்டு பிடிக்கப்பட்டன. 1908ஆம் ஆண்டின் 333 ஆம் எண்ணுள்ள சாசனத் தொகுப்பாக இவ்வெழுத்து பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.' இந்த எழுத்துக்கள் ஒரே வரியாக முப்பத்தொருஎழுத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த வரியின் பதினெட்டு எழுத்துக்கள் பெரியவை யாகவும் அடுத்த பதின்மூன்று எழுத்துக்கள் சற்றுச்சிறியவையாகவும் இருக்கின்றன. பெரிய எழுத்தின் இறுதியில் சிறிய எழுத்தின் தொடக்கத்திலும் இடையிலே செங்குத்தான சிறுகோடு காணப்படுகிறது. எனவே இந்தக் கல்வெட்டெழுத்து இரண்டு பகுதிகளாக அமைந் துள்ளது. இந்தக் கல்வெட்டெழுத்தின் வரிவடிவம் இது.

இந்த எழுத்துக்களை அறிஞர்கள் எப்படிப் படித்திருக் கிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு கூறுகிறார்.