உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

157

இல்லாமலும் கருத்துக்களை முழுதும் தெரிவிக்கக் கூடியவை களாகவும் இருக்கின்றன.

இந்தியா தேசத்தில் பழைய காலத்திலே சிறப்பாக வழங்கி வந்த ஒலி எழுத்துக்கள் இரண்டு. அவை, கரோஷ்டி, பிராமி என்பவை. கரோஷ்டி, இந்தியாவில் வடமேற்குப் பக்கத்தில் மட்டும் வழங்கி வந்தது. பிராமி எழுத்து வட இந்தியா முழுவதும் வழங்கி வந்தது. பிராமி எழுத்தின் உற்பத்தியைப் பற்றிச் சில கதைகள் கூறப்படுகின்றன. பிரமா கண்டு பிடித்தது பிராமி எழுத்து என்பர் சிலர். ரிஷப தீர்த்தங்கரரின் மகளான பிராமி என்பவள் கண்டுபிடித்தது பிராமி எழுத்து என்பர் ஜைனர்கள். கௌதம புத்தர், சித்தார்த்த குமரன் என்னும் பெயரையுடைய சிறுவராக இருந்த போது பிராமி எழுத்தைக் கண்டு பிடித்தார் என்று க்ஷேமேந்திரர் என்பவர் தாம் இயற்றிய புத்த ஜனனம் என்னும் நூரிலே கூறுகிறார். இந்தக் கதைகளை உண்மையான சான்றுகளாகக் கொள்ளாவிட்டாலும், இவற்றிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. அஃது என்னவென்றால், வடஇந்தியாவில் பண்டைக் காலத்தில் பெரிதும் வழக்காற்றில் இருந்துவந்த எழுத்து பிராமி எழுத்து என்பதே. பிராமி எழுத்து கி.மு. 5-ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்து வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டிலே கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்திலே வழங்கி வந்த தமிழ் எழுத்து இன்னது என்று இப்போது அறிய முடியவில்லை. ஆனால், ஏதோ ஒருவகையான எழுத்து வழங்கி வந்தது என்பதை உறுதியாகக் கூறலாம். பாண்டிய நாட்டிலே தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், என்று மூன்று சங்கங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஏற்படுத்தப்பட்டு முத்தமிழ் நூல்கள் ஆராய்ப்பட்டன என்று வரலாறு கூறுகிறது. அந்தச் சங்கங்களிலே சிவபெருமான், முருகக் கடவுள், கிருஷ்ணன், குபேரன் முதலான கடவுள்கள் அங்கத்தினராக இருந்தார்கள் என்பதையும், அந்தச் சங்கங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்று வந்தன என்பதையும் மிகைபடக்கூறல் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், சங்கங்கள் இருந்தன என்பதையும் அவற்றில் முத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டன என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அந்தச் சங்கங்களிலே தமிழ் நூல்கள் ஆராயப்பட்டன என்றால், அதற்கு ஏதோ ஒருவகையான எழுத்துக்கள் இருந்திருக்க வேண்டும்