உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

அல்லவா? அந்த எழுத்து இன்னது என்பது இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால், கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டிலே வழங்கிவந்த எழுத்து பிராமி எழுத்துத்தான் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. ஏனென்றால், இதற்கு ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

6

வடஇந்தியாவில் வழங்கிவந்த பிராமி எழுத்து தமிழ் நாட்டிற்கு எப்படி வந்தது? பிராமி எழுத்தைத் தென் இந்தியாவிலே பரவச் செய்தவர்கள் பௌத்தபிக்ஷுக்கள் ஆவர். கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி, பௌத்த மதத்தைப் பிரசாரம் செய்வதற்காகப் பல நாடுகளுக்கும் பௌத்த பிக்ஷுக்களை அனுப்பினார்.அவ்வாறு அனுப்பப்பட்ட பிக்ஷுக்கள் இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் சென்று பௌத்த மதப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்கள் தம் பௌத்தமதக் கொள்கைப்படி அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலே பௌத்தமதக் கொள்கைகளை பிரசாரம் செய்துவந்தார்கள் என்றாலும், அவர்கள் எல்லா நாடுகளிலும் ஒரேவிதமாகப் பிராமி எழுத்தே வழங்கி வந்தார்கள். இவ்விதமாகப் பௌத்த பிக்ஷுக்களால் முதல்முதல் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிராமி எழுத்து புகுத்தப்பட்டு வழக்காற்றில் வந்தது. அன்றியும் அசோகச் சக்கரவர்த்தி, தென் இந்தியா உட்பட இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே பல இடங்களில் அரச சாசனங்களைக் கல்வெட்டுகளில் எழுதி அமைத்திருக்கிறார். அந்தச் சாசனங்கள் இப்போதும் இருக்கின்றன. அந்தச் சாசனங்கள் பிராமி எழுத்தினால் எழுதப் பட்டிருக்கின்றன. இதனால், அசோக சக்கரவர்த்தி காலத்திலே, அதாவது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலே பிராமி எழுத்து தென் இந்தியாவிலும் வழங்கப்பட்டது என்பது நன்கு விளங்குகின்றது.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையில், சுமார் 600 ஆண்டுகளாகப் பிராமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கிவந்தது. இதற்கு எபிகிராபி சான்றுகள் தமிழ் நாட்டிலே, முக்கியமாகப் பாண்டிய நாட்டிலே மலைக்குகைகளிலும், மலைப் பாறைகளிலும் காணப்படுகின்றன. அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங் குளம், முத்துப்பட்டி, அரிட்டாபட்டி, குன்னக்குடி, மருகால்தலை, ஆறுநாட்டார்மலை முதலிய இடங்களில் காணப்படும் தமிழ்ச் சாசனங்கள் பிராமி எழுத்தினாலே எழுதப்பட்டவை. இவைகளைத்