உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

159

தவிர வேறு புதிய எபிகிராபி சான்று இப்போது கிடைத்திருக்கிறது. புதுச்சேரிக்குத் தெற்கே 2 மைல் தூரத்தில் கடற்கரையோரத்திலே அரிக்கமேடு என்னும் ஒரு மேடு இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஆர்க்கியாலஜி இலாகா அதிகாரிகள் இந்த மேட்டைக் கிளறித் தோண்டிப் பார்த்தார்கள். இங்கிருந்து பல பொருள்கள் அகப்பட்டன. அப்பொருள்களுடன், பிராமி எழுத்தில் எழுதப்பட்ட இவை தமிழ்மொழியாக இருக்கின்றன. அரிக்கமேடு, இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே, அதாவது கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது என்று ஆர்க்கியாலஜி இலாகா ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தச் சான்றுகளினாலே, கி.மு. 3- ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டிலே தமிழர் பிராமி எழுத்தை வழங்கி வந்தார்கள் என்பது ஐயம் இல்லாமல் தெரிகிறது. தமிழர் பழைமையாக எழுதியிருந்த பழைய எழுத்தைக் கைவிட்டு புதிதாகப் பிராமி எழுத்தை எழுதத் தொடங்கியபோது, தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள ள, ழ, ற, ன என்னும் எழுத்துக்கள் பிராமி எழுத்தில் இல்லாதபடியினால், இவ்வெழுத்துக்களைப் பழைமையாக வழங்கி வந்த எழுத்துக்களில் இருந்தபடியே வழங்கி வந்தார்கள் போலும்.

சுமார் கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிலே பிராமி எழுத்து மறைந்து வட்டெழுத்து என்னும் புதுவகையான எழுத்து வழங்கத் தொடங்கிற்று. வட்டெழுத்தும், பிராமி எழுத்திலிருந்து உண்டானதுதான். அக்காலத்தில் பனையோலையும், எழுத்தாணி யும் எழுதுகருவிகளாக இருந்தன. பிராமி எழுத்தைப் பனை யோலையில் எழுத்தாணியால் எழுதும்போது, அவ்வெழுத்தின் உருவம் மாறுதல் அடைந்து கடைசியில் வட்டெழுத்தாக மாறிவிட்டது. பண்டைக் காலத்தில் சரநாடு என்னும் பெயருடன் தமிழ்நாடாக இருந்து இப்போது மலையாள நாடாக மாறிப்போன கேரள நாட்டிலே முற்காலத்தில் வழங்கி வந்த கோலெழுத்து என்பதும் வட்டெழுத்தின் திரிபேயாகும். வட்டெழுத்து தமிழ் நாட்டில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10– ஆம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தது. பிறகு வட்டெழுத்து மறைந்து இப்போது வழக்காற்றில் இருந்து வருகிற கிரந்த எழுத்து வழங்கி வருகிறது.

கிரந்த எழுத்தை உண்டாக்கினவர்கள் தென்னாட்டில் இருந்த பௌத்தரும் ஜைனரும் ஆவர். பௌத்தரும் ஜைனரும் தங்கள்