உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

185

விபுலனும் வேறு ஒரு வீரனும் போர்செய்தபோது அந்த வீரன் வீரமரணம் அடைந்தான். அப்போது அரமங்கையர் அவன்மேல் மலர்மாரி சொரிந்து தொழுது வீரசுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்கள் என்று சிந்தாமணிக் காவியம் கூறுகிறது

எரிந்தார் அயில் இடைபோழ்ந்தமை உணராதவன் நின்றான் சொரிந்தார் மலர் அரமங்கையர் தொழுதார் விசும்படைந்தான்

என்னும் செய்யுளும்,

(சீவகசிந்தாமணி மண்மகள் 164)

தற்புரந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தால்

கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர் தோய்வர்

பொற்ற சொன்மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கல்மேல் நிற்பர் தம் வீரந்தோன்ற நெடும்புகழ் பரப்பி என்றான்.

(சீவகசிந்தாமணி மண்மகன் 201)

என்னும் செய்யுளும் போரில் மடிந்த வீரர், வீரசுவர்க்கம் போகிறார் என்பதைக் கூறுகின்றன.

சில நடுகற்களிலே கீழ்ப்பகுதி, மேல்பகுதிகளாக இரண்டு சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதி சிற்பம், போர் வீரன் போர் செய்வது போன்று காணப்படுகிறது. அந்த சிற்பத்துக்கு மேலேயுள்ள சிற்பம், அந்த வீரன் போரில் இறந்த பிறகு வீரசுவர்க்கம் சென்று, அங்கு அரமங்கையரோடு இருப்பதைக் குறிக்கின்றன. இவை, வீரமரணம் அடைந்த வீரன், வீரசுவர்க்கம் சென்று இன்பம் அனுபவிக்கிறான் என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றன.

முன்பு சொன்னது போல நடுகற்களைப் பற்றித் தமிழ் இலக்கியங் களிலே பல குறிப்புகள் காணப்படுகின்றன. ஏட்டிலே கூறப்படுகிற நடுகற்களைப் போலவே, நாட்டிலும் நடுகற்கள் காட்சியளிக்கின்றன.

அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் தாம் பாடிய திருவாரூர் மும்மணிக் கோவை யில், "பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டக்கல்லும் என்று நடுகல்லைக் கூறுகிறார்.