உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சமண சமய தத்துவம்

இனி, சமண சமய தத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்:

'உயிரும்உயி ரல்லதும், புண்ணியம், பாவம், ஊற்றும்

செயிர் தீர்செறிப் பும், உதிர்ப்பும், கட்டும், வீடும், உற்ற துயர்தீர்க்கும் தூய நெறியும்சுருக் காய்யுரைப்பன்; மயல்தீர்ந்த காட்சி யுடையோய்! இது கேண்மதித்தே’

என்பது மேருமந்தரபுராணம்.

சமணசமய தத்துவத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்படுகின்றன. இவற்றை நவபதார்த்தம் என்பர். இவை: உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம், ஸம்வரை, நிர்ஜரை, பந்தம், மோக்ஷம் என்றும் கூறுவர். இவ்வொன்பது பொருள்களை விளக்குவோம்.

1. உயிர் (ஜீவன்) :

உயிர்கள் எண்ணிறந்தன; அழிவில்லா தன; அநாதியாக உள்ளன. அஃதாவது, உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை. நல்வினை, தீவினை என்னும் இருவினைகளை (புண்ணிய பாவங்களைச்) செய்து அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்பபதற்கு நரக கதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவ கதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து, இறந்து, உழன்று, திரிவதும் இருவினைகளை அறுத்துப் பிறவா நிலை யாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும். உயிர்கள் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப்படும். ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை, பகுத்தறிவு உடையவை என இருவகைப்படும்'.

6

உடம்பின் பருமை சிறுமைக்கு ஏற்ப உயிரானது பெரிய தாகவும், சிறியதாகவும் உடல் முழுவதும் பரந்து நிற்கும். குடத்திற்குள் வைத்த விளக்கு குடத்திற்குள் மட்டும் ஒளிகாட்டும். பெரிய அறையில் வைத்த விளக்கு அறை முழுவதும் ஒளிகாட்டும்; அதுபோல, உடம்புகளின்