உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

131

பிராமணரைக் கொன்ற பாவத்திலும் போகக் கடவன்86 என்று ஒரு சாசனம் கூறுகிறது.

ஜினசிந்தாமணி நல்லூர் :

விருத்தாசலம் தாலுகா. இவ்வூர்ப் பெயரே இது ஒரு சமண ஊர் என்பதைத் தெரிவிக்கிறது.

வேடூர் :

விழுப்புரத்திற்குக் கிழக்கே 11 மைலில் உள்ளது. இங்குள்ள சமணக் கோயில் இப்போதும் பூசிக்கப்படுகிறது.

எள்ளானாசூர் :

87

88

திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயி லூருக்குத் தெற்கே 16 1/ மைலில் உள்ளது. ஒரு பழைய சமணர் கோயில் இங்கு உள்ளது. செஞ்சி :

செஞ்சிக் கோட்டைக்கு அருகில் 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. (Annual Report of Arch. Dept. Southern Circle Madras. 1912-13. P. 7.)

உறையூர் :

5. திருச்சிராப்பள்ளி மாவட்டம்

2

இதனை ‘உறந்தை”, “கோழியூர்' என்றும் கூறுவர். இது சோழ அரசரின் தலைநகரமாக இருந்தது. இவ்வூரில் அருகக்கடவுளின் கோயிலும், சமண முனிவர்களும் இருந்தனர் என்றும்; கோவலன் கண்ணகியருடன் மதுரைக்குச் சென்ற கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி, இவ்வூரில் தங்கி அருகக்கடவுளையும், முனிவரையும் வணங்கினார் என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.89 இதனால் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இங்கு சமணர் இருந்த செய்தி அறியப்படுகிறது. நீலகேசி என்னும் நூலிலும், இவ்வூரில் சமணக் கோயில் இருந்த செய்தி கூறப்படுகின்றது.” உறையூரிலும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். இவ்வூரைச் சமணர் தமது மந்திர வலிமையினால் அழித்துவிட்டார்கள் என்று சைவ சமய நூலாகிய தக்கயாகப் பரணி உரையில் கூறப்பட்டுள்ளது.91 சோழ அரசன்மேல் சினங்கொண்ட சிவபெருமான், மண் மழை பொழியச்