உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

37

என்று சூத்திரம் அமைத்த தொல்காப்பியர், 'திரமிள சங்கம்' என்னும் பெயருடன் அமைக்கப்பட்ட சங்கம் என்னும் சொல் வழங்கிய காலத்தில் இருந்தார் என்று வையாபுரியார் கூறுவது ஆராய்ச்சியா என்று கேட்கிறோம். (இதுபற்றிப் பிறிதோர் இடத்தில் விளக்கியுள்ளோம்).

இவ்வாறு வையாபுரிப்பிள்ளையும் சிவராசப்பிள்ளையும் முன்பின் சிந்திக்காமல், வரலாற்று முறையைச் சிறிதும் எண்ணிப் பாராமல் 'வாய் புளித்ததா மாங்காய் புளித்ததா' என்பதுபோல மனம் போனபடி எல்லாம் எழுதிவிட்டால் அவை எல்லாம் ஆராய்ச்சியாய் விடுமா? படிக்கிறவர்களுக்கும் பகுத்தறிவும் ஆராய்ச்சியறிவும் சிந்திக்கும் ஆற்றலும் உண்டு என்பதைச் சிறிதும் எண்ணாமல் கண்டபடி எழுதுவது அறிவுடைமை யாகுமா?

மேலே காட்டிய சான்றுகளால், தொல்காப்பியம் பழமையான நூல் என்பதும், புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்கள் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்ட செய்யுட்கள் என்பதும் அங்கை நெல்லிக்கனி போல் விளங்குகின்றன.