உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

தொல்காப்பியர் தம் காலத்து இலக்கிய வழக்குக்கு ஏற்ப இலக்கணம் செய்தார். இலக்கணம் எழுதுவோர் இலக்கிய வழக்கைப் பின்பற்றி நூல் இயற்றுவது வழக்கம். இலக்கியத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதுவது மரபு. அதன்படி தொல்காப்பியர் தமது காலத்து இலக்கிய வழக்கத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதினார்.

தொல்காப்பிய இலக்கணம் எழுதியபின், பல நூற்றாண்டு களுக்குப் பிறகு சில புதிய சொற்கள் தமிழில் வந்து கலந்தன. பேச்சு வழக்கிலுள்ள மொழிகளில் காலந்தோறும் புதிய புதிய சொற்கள் வந்து கலப்பது இயற்கை. இதைத் தடுக்க முடியாது. இந்த முறைப்படித் தொல்காப்பியர் காலத்தில் வழங்காத, அந்த இலக்கண முறைக்கு அமையாத, வேறு சில சொற்கள் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தமிழில் வந்து கலந்து விட்டன. அந்தச் சொற்கள் தான் மேலே எடுத்துக் காட்டிய சகடம், சடை, யவனர், யூபம், ஞமலி, ஞமன் முதலியன. காலப் போக்கில் வியங்கோள் வினைச் சொற்களும் தொல்காப்பிய இலக் கணத்துக்கு மாறாக முன்னிலையிலும் வந்து வழங்கப்பட்டது. இவை எல்லாம் தொல்காப்பியத்துக்குப் பிற்காலத்திலே ஏற்பட்ட மாறுதல்கள். இவ்விதச் சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியிருந்தால் இவற்றிற்கு ஏற்பவே அவர் தமது இலக்கணத்தில் இணைத்துச் சூத்திரஞ் செய்திருப்பார். இச்சொற்களை சேர்க்காமையினாலேதொல்காப்பியம் இச்சொற்கள் தமிழில் வழங்குவதற்கு முன்னே எழுதப்பட்ட நூல் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது.

ஆனால், சிவராசபிள்ளையவர்களோ இந்த உண்மைக்கு மாறாக வரலாற்றைத் தலைகீழாக மாற்றுகிறார். மாற்றிப் புறநானூற்றுக்குப் பிறகு தொல்காப்பிய நூல் இயற்றப்பட்டது என்று கூறுகிறார். இவர் கூற்றை அறிவுடையுலகம் ஏற்றுக்கொள்ளுமா?

வையாபுரிபிள்ளை, தொல்காப்பியம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வச்சிரநந்தி அமைந்த திரமிள சங்கத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார். (Page 14. History of Tamil Language and Literature).

சங்கம், சட்டி முதலிய சகர எழுத்தை முதலாகவுடைய சொற்கள் வழங்காத காலத்திலிருந்த தொல்காப்பியர்,

‘சகரக் கிளவியும் அவற்றோ எற்றே

அஐ ஒளவெனும் மூன்றலங் கடையே'