உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

35

ஏனை உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து வராது என்பது இச்சூத்திரத்தின் பொருள். இதற்கு மாறாகப் புறநானூற்றில் சொற்கள் வந்துள்ளன:

'தெரிகோன் ஞமன்ன் போல' (புறம். 6 : 9)

'கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை' (பட்டினப். 140) 'தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இg இய' (புறம். 74 : 3) 'வரிஞி மிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து' (புறம். 93:12) வியங்கோள் வினையைப்பற்றித் தொல்காப்பியம் கூறுவது: ‘முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு

மன்னா தாகும் வியங்கோட் கிளவி'

என்பது தொல்: சொல். 226 - ஆவது சூத்திரம். வியங்கோள் வினை, படர்க்கையில் மட்டும் வரும் என்பது இச்சூத்திரத்தின் கருத்து. இதற்கு மாறாகப் புறநானூற்றில் முன்னிலை இடத்தில் வியங்கோள்வினை வந்துள்ளது.

‘பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்

நாஅல் வேத நெறி திரியினும்

திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி

நடுக்கின்றி நிலீயரோ’

(புறம். 2 : 17-20 முரஞ்சியூர் முடிநாக ராயர்)

'தண்டா ஈகைத் தகைமாண் குடுமி

தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும்

மன்னிய பெருமநீ நிலமிசை யானே’

(புறம்.6 : 26-29. காரிகிழார்)

‘எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே’

(புறம். 9 : 8-11. நெட்டிமையார்)

இவ்வாறு புறநானூற்றுச் செய்யுட்களில் சில சொற்கள் தொல்காப்பிய இலக்கணத்துக்கு மாறுபடக் காணப்படுகின்றன.