உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

அங்குலி யிரண்டால் ஐயன்

செவியுற வலித்து விட்டான்

மங்குலின் முழங்கும் வேழ

99

மத்தகங் கிழிந்த தன்றே. (30)

205

பிறகு, இந்த யானைமலையில் சிவன் எய்த நாரசிங்க அம்பு நாரசிங்கமூர்த்தியாய் அமைந்தது என்று மேற்படி புராணம் கூறுகிறது:-

66

"வம்புளாய் மலர்ந்த ஆரான்

வரவிடு மத்தக் குன்றில்

சிம்புளாய் வடிவங் கொண்ட

சேவகன் ஏவல் செய்த

அம்புளாய்த் தூணம் விள்ள

அன்றவ தரித்தவா போல்

செம்புளாய்க் கொடிய நார

சிங்கமாய் இருந்த தன்றே. 41

யானைமலையில் அஜ்ஜநந்தி முதலிய சமணர் இருந்ததையும், திருஞானசம்பந்தர் யானைமலையில் சமணர் இருந்தனர் என்று கூறியதையும், பின்னர் பாண்டியன் அமைச்சரான மாறன்காரி யானைமலைக் குகையில் நரசிங்கமூர்த்தியை அமைத்ததையும் சொக்கப் பெருமான் நாரசிங்க அம்பு எய்து சமணருடைய யானையை (மலையை) அழித்தார் என்பதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி ஆராய்ந்து பார்த்தால். சைவரும் வைணவரும் சேர்ந்து சமணருடைய யானைமலையைக் கைப்பற்றினார் என்னும் உண்மை புலனாகும். இதுபோன்று வேறு செய்திகளும் உள. விரிவஞ்சி நிறுத்துகிறோம்.

அடிக்குறிப்புகள்

1. நருமதை ஆற்றங்கரையிலும் அதைச் சூழ்ந்த இடங்களிலும் சமண மதம் பண்டைக்காலத்தில் செழிப்புற்றிருந்த செய்தி ஆங்குக் கிடக்கும் சிலாசாசனங்களாலும் சிற்ப உருவங்களாலும் தெரிய வருகிறது. 2. இக் கதையில் திருப்பருத்திக் குன்றம் கூறப்படுகிறது. திருப்பருத்திக் குன்றத்தில் இப்போதும் சமணக்கோயில் இருக்கிறது. காஞ்சிபுரத்துக் கருகிலுள்ள இத்திருப்பருத்திக் குன்றத்திற்குச் சின காஞ்சி என்று பெயர். காஞ்சியில் பண்டைக்காலத்திலிருந்து பௌத்த சமணக்