உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

அச்சொற்களில் ஒன்று ஹோரா என்பது சமஸ்கிருத பாஷையே இந்தச் சொல்லைக் குப்த அரசர் காலம் அல்லது ஏறக்குறைய கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்றிருக்கவில்லை என்றால், சமஸ் கிருதத்திலிருந்து இந்தச் சொல்லைப் பெற்றுக்கொண்ட தொல்காப்பியர் - (இந்தச் சொல்லை அவர் நேரே கிரேக்க மொழியிலிருந்து எடுத்துக் கொண்டார் என்று சிலர் கருதக்கூடும் என் எண்ணுகிறேன்) - எப்படிப் பழைய காலத்தவராக இருக்க முடியும்?1

இவ்வாறு சிவராக பிள்ளையவர்கள், ஹோரா என்ற கிரேக்க மொழிச் சொல் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் சென்று பிறகு அச்சொல் ஓரை என்று தொல்காப்பியத்தில் புகுந்தது என்றும், ஆகவே அச்சொல்லை வழங்குகிற தொல்காப்பியர், கி.பி.5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தவர் என்றும் 1932 ஆம் ஆண்டில் தமது நூலில் எழுதி வைத்தார்.

இவருக்குப் பிறகு வந்த எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள், சிவராசபிள்ளை கூறியதையே திரும்பக் கூறினார், ஆனால் இக் கருத்தை முதல்முதல் சிவராச பிள்ளை கூறினார் என்பதை வையாபுரி பிள்ளை கூறாமல், தாமே இக்கருத்தைக் கூறுபவர்போலக் கூறினார். 1956 ஆம் ஆண்டில் வையாபுரிபிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட 'தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலிலே இவ்வாறு எழுதுகிறார்:

66

‘அதனுடைய (தொல்காப்பியத்தினுடைய) ஆசிரியர் ஓரை என்னுஞ் சொல்லை (சமஸ்கிருதம் ஹோரா) ஆள்கிறார். ஓரை என்னும் கிரேக்க மொழிச் சொல்லைக் கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழி வானசாஸ்திரிகள் கிரேக்க மொழியி லிருந்து கடனாகக் கொண்டனர்” (பக்கம் 14) என்றும்,

"தொல்காப்பியரின் காலத்தைப் பற்றிய விஷயம் விவாதத்துக் குரியது. ஆனால், அவர் கி.பி.5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர் என்பதற்கு மிகப் பலமான ஆதாரங்கள் உள்ளன. இதுபற்றி முன்னமே விளக்கியுள்ளோம்" (பக்கம் 65) என்றும் எழுதுகிறார்.?

2

1. PP. 263 - 264 The Chronology of The Eqrly Tamils by K.N. Sivaraja Pillai, 1932 P. 14 and 65. History of Tamil language and Literature Prof. S. Vaiyapuri Pillai

2.

1956.