உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக் கொங்கவிர் அசோகின் குளிர்நிழற்கீழ்ச் செழுநீர்ப்பவளத் திரள்காம்பின் முழுமதிபுரையும் முக்குடைநீழல் வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்

பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப அனந்தசதுட்டய மவையெய்த

நனந்தலையுலகுட னவைநீங்க

மந்தமாருதம் மருங்கசைப்ப

அந்தரதுந்துபி நின்றியம்ப

இலங்குசாமரை எழுந்தலமர

நலங்கிளர்பூமழை நனிசொரிதர

இனிதிருந்து

அருள்நெறி நடாத்திய வாதிதன்

திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே.

(27)

வஞ்சிப்பா

213

பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி

வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார் அதனால்,

அறிவன தடியிணை பரவிப்

பெறுகுவர் யாவரும் பிறவியில் நெறியே.

வெண்கலிப்பா

(28)

வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக் கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின் மாலைதாழ் கூந்தலார் வரன்முறையால் வந்தேத்தச் சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொன்முறையால் மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீட்டொடுகட் டிவையுரைத்த தொன்முறைசால் கழிகுணத்தெம் துறவரசைத் தொழுதேத்த நன்மைசால் வீடெய்து மாறு.

(29)