உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

பாடு வண்டு பாண்செயும் நீடு பிண்டி நீழலான்

வீடு வேண்டு வார்க்கெலாம்

ஊடு போக்கும் உத்தமன்

(15)

முரன்று சென்று வட்டின

நிரந்து பிண்டி நீழலுள்

பரந்த சோதி நாதனெம்

அரந்தை நீக்கும் அண்ணலே.

(16)

வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்

அனகைத் தானருள் காண்குறிற்

கனகத் தாமரைப் பூமிசைச்

சினனைச் சிந்திமின் செவ்வனே.

(17)

ஆதி யான்ற வாழியி னான்அலர்ச்

சோதி யான்சொரி பூமழை யான்வினைக்

காதி வென்றபி ரானவன் பாதமே

நீதி யால்நினை வாழிய நெஞ்சமே.

(18)

பொங்கு சாமரை தாம்வீசச்

சிங்க பீடம் அமர்ந்த வெங்

கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிச்

செங்க ணானடி சேர்மினே.

(19)

போது விண்ட புண்ட ரீக

மாத ரோடு வைக வேண்டின்

ஆதி நாதர் ஆய்ந்த நூலின்

நீதி யோடு நின்மின் நீடு.

(20)

ஒருதிரள் பிண்டிப் பொன்னெயில் மூன்றின்

ஈரறம் பயந்த நான்முக வண்ண

மூவகை உலகிற்கும் ஒருபெருங் கடவுள்,

நால்வகை யோனியுள் இருவினை கடிந்து

முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன்,

நால்வகை யளவையும் இருவகைப் பண்பும்

ஒன்ற உரைத்த முக்குடைச் செல்வன்

ஈரடி பரவினர் என்ப

பேரா நன்னெறி பெறுகிற் போரே.

(21)