உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

மாகெழு நீழல் கேவலந் தோற்றிய

ஆதியங் குரிசில்நிற் பரவுதும்

தீதறு சிவகதி சேர்கயாம் எனவே.

வஞ்சிப்பா

வினைத் திண்பகை விழச் செற்றவன்

வனப் பங்கய மலர்த் தாளிணை

மயலார் நாற்கதி மருவார்

நினைத் தன்பொடு தொழுதேத்தினர் நாளும்,

பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே.

(22)

(23)

வஞ்சிப்பா

வானோர்தொழ வண் தாமரைத்

தேனார்மலர் மேல்வந்தருள்

ஆனாவருள் கூரறிவனைக் கானார்

மலர்கொண் டேத்தி வணங்குநர்

பலர்புகழ் முத்தி பெறுகுவர் விரைந்தே.

(24)

தாளோங்கிய தண்பிண்டியின்

நாள்மலர்விரி தருநிழற்கீழ்ச்

சுடர்பொன்னெயில நகர்நடுவண்

அரியணைமிசை யினிதமர்ந்தனை அதனால்

பெருந்தகை அண்ணல்நிற் பரசுதும்

திருந்திய சிவகதி சேர்கயாம் எனவே.

(25)

வெள்ளொத்தாழிசை

போதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியணிப்புனல்

தாதார் மலரடியைத் தணவாது வணங்குவோர்

தீதார் வினைகெடுப்பர் சென்று.

வஞ்சிப்பா

அங்கண்வானத் தமரரசரும்

வெங்களியானை வேல்வேந்தரும்

வடிவார்கூந்தல் மங்கையரும்

கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்

(26)