உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

59

லிருந்துதான் கருத்துக்கள் மற்ற மொழிகளில் சென்றிருக்கவேண்டும் என்றும் மூட நம்பிக்கைதான் இவர்களுக்கு ஆதாரம்.

திரு. பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி தாம் எழுதிய “வடமொழி வரலாறு” என்னும் நூலில் 536 ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “த்ருச்ய காவ்யத்திற்கு ரூபகம் எனவும் பெயர் உண்டு. அதனைப்பற்றி விரிவாய்க் கூறும் நூல் நாட்டிய சாஸ்திரம் ஆகும். அந்நூல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் உள்ளது எனக் கொள்ளத்தக்க சான்று இல்லை எனக் கீத் (A. Keith) கூறினார். ஆனால், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னதான தமிழ்த் தொல்காப்பியத்திலுள்ள மெய்ப் பாட்டியற் சூத்திரங்கள் பல, நாட்டிய சாஸ்திரத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டனவாகத் தோன்றுகின்றது. ஆகலின் நாட்டிய சாஸ்திரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாய் இருத்தல்வேண்டும்”.

3

4

மேலும், இதே செய்தியை மேற்படி நூலின் இன்னொரு இடத்திலும் எழுதுகிறார்:

66

995

"தமிழிலக்கணமாகிய தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலில் ஏழு சூத்திரங்கள் நாட்டிய சாஸ்திரப் பகுதியின் மொழி பெயர்ப்பாக இருத்தலாலும், தொல்காப்பியமும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட நூலன்றாகலானும், நாட்டிய சாஸ்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னது எனக்கொள்ளத்தகும்.” இவருடைய ஆராய்ச்சியின் போக்கு எப்படியிருக்கிறது பாருங்கள்! தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள், வடமொழி நாட்டிய சாஸ்திரத்தில் இருப்பதனாலே, தொல்காப்பியம் நாட்டிய சாஸ்திரத்துக்குப் பிற்பட்ட நூலாம்! தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் நாட்டிய சாஸ்திரத்தில் காணப்படுகிறபடியினாலே, நாட்டிய சாஸ்திரம் தொல் காப்பியத்திற்குப் பிற்பட்ட நூல் என்று கூறலாம் அல்லவா? ஆனால், சுப்பிரமணிய சாஸ்திரி அப்படிக் கூறவில்லை. ஏனென்றால், சமஸ் கிருதத்திலிருந்து தான் மற்றப் பாஷைகள் கடன் கொண்டிருக்க வேண்டும் என்பது சமஸ்கிருத பண்டிதர்களின் அழுத்தமான மூட நம்பிக்கையல்லவா? ஆகவேதான், சுப்பிரமணி சாஸ்திரி நாட்டிய 3. TolkappiyamCollatikaram. English Commentary, PP - XXVI and XXVII by P.S. Subramanya Sastri.

4.

வடமொழி நூல் வரலாறு - பக்கம். 536 வித்தியாரத்தினம் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி. அண்ணாமலை பல்கலைக் கழகப் பதிப்பு 1946.

5. பக்கம் 662-63 வடமொழி நூல் வரலாறு. வித்தியாரத்தினம் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி,அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிப்பு 1946.