உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சைவ சமய வரலாறு'

'தென்னாடு உடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

என்று அருளிச் செய்தார் மாணிக்க வாசகப் பெருமான். சிவபெருமான் தென்னாட்டுத் தமிழரின் (திராவிடரின்) பழம் பெருங்கடவுள். தமிழர் சிறு தெய்வங்களையும் வணங்கினார்கள். ஆனால், அச் சிறு தெய்வங்களுக்கெல்லாம் ஒரு பெருந் தெய்வமாக, முழு முதற் கடவுளாகச் சிவபெருமானைத் தமிழர் வணங்கிப் போற்றினார்கள். பழங்காலத்தில் சிவபெருமானை வணங்கியவர்கள் உருவம் இல்லாத ஒரு அடையாளத்தை வைத்து வணங்கினார்கள். உருவம் இல்லாத அந்த அடையாளத்திற்குப் பெயர் இலிங்கம் என்பது. சிவலிங்கத்துக்குத் தமிழர் வழங்கிய பெயர் கந்தழி என்பது. இலிங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் வழங்கத் தொடங்கிய பிறகு, பழைய கந்தழி என்னும் பெயர் மறைந்து விட்டது. கந்தழியாகிய சிவலிங்க வழிபாடு மிக மிகத் தொன்மையானது. சிவபெருமானுக்குப் பல பெயர்கள் உண்டு. ஆதிரை முதல்வன், ஆதிரையான், ஆலமர் கடவுள், ஆனேற்றுக் கொடியான், ஈர்ஞ்சடை யந்தணன், எரிதிகழ் கணிச்சியான், ஏற்றூர்தியான், கறைமிடற்றண்ணல், காரி யுண்டிக் கடவுள், சடையன், செல்விடைப்பாகன், தாழ் சடைக் கடவுள், நீர் சடைக் கரந்தோன், நீலமிடற்றொருவன், புதுத் திங்கட் கண்ணியான், மணிமிடற்றண்ணல், மழுவாள் நெடியோன், முக்கட்செல்வன் முதலிய பெயர்கள் சங்க நூல்களில் காணப்படுகின்றன.

தமிழ் நாட்டிலும் பாரத தேசத்தின் பல பாகங்களிலும் ஆதிகாலம் முதல் சிவபெருமானுக்குத் திருக் கோவில்கள் இருந்து வருகின்றன. காசி முதல் இராமேசுவரம் வரையில், ஏன் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள சிவபெருமானின் திருக்கோவில்களுக்குக்

கணக்கில்லை.

சிவபெருமானுக்கு அடுத்தபடியாகத் திருமால் (பெருமாள்) வழிபாடு ஆதிகாலம் முதல் இருந்து வந்தது. பழங்காலத்தில் சிவ ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் நூற்றாண்டு விழா மலர் (1963)