உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

233

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே ஜைன சமயமும் (சமண சமயம்), பௌத்த மதமும் தமிழ் நாட்டிற்கு வந்தன. சந்திரகுப்த மௌரிய அரசன் காலத்தில் ஜைன சமயத் துறவிகள் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். சந்திரகுப்தனின் பேரனான அசோக சக்கரவர்த்தி காலத்தில் பௌத்த மதத் துறவிகள் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். ஏறத்தாழ அக் காலத்தி லேயே வைதீக மதத்தராகிய பிராமணர் (வடமொழி வேதமதம்) தமிழ் நாட்டில் வந்திருந் தார்கள். ஆனால், வைதீகப் பிராமணர் சிறு தொகையினராக இருந்தார்கள். தமிழ் நாட்டுக்கு வந்த ஜைன முனிவர்களும், பௌத்த பிக்குகளும்; ஜைன, பௌத்த மதங்களைப் பிரசாரம் செய்து தமிழர்களைச் சமணர்களாகவும், பௌத்தர்களாகவும் மதம் மாற்றினார்கள். இந்த மதத்தாருக்குச் சாதி வேறுபாடுகள் கிடையா. வைதீகப் பிராமணர் வைதீக மதப் பிரசாரம் செய்து தம்முடைய வைதீக மதத்தைப் பரப்பவில்லை. காரணம் என்னவென்றால், பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டிய வைதீகப் பிராமணர், மற்றவர்களைத் தம்முடைய மதத்தில் சேர்த்தால் தங்கள் சாதி கெட்டுப் போகும் என்று கருதியது தான். சாதியில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு குறுகிய கொள்கையுடையவர்களாக இருந்தனர் சிறு கூட்டத்தி னராகிய வைதீகப் பிராமணர்.

தமிழ் நாட்டுக்கு வந்த பௌத்த ஜைன மதங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. வைதீகப் பிராமண மதம் வளராமல் குறுகிக் கொண் டிருந்தது. மேலும், இம் மூன்று மதத்தாரும் பிறவிப் பகையுடையவராக இருந்தனர். ஆகவே, இவர்களுக்குள் சமயப் பகை வேரூன்றி இருந்தது. இவர்கள் ஒருவருக்கொருவர் எதிரி மதங்களைப் பழித்துப்

பேசினார்கள்.

வைதீகப் பிராமணர், மற்ற ஜாதியாரைத் தம்முடைய மதத்தில் சேர்க்காமல் இருந்ததோடு அமையாமல், பௌத்த ஜைன மதங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த படியால் பௌத்த ஜைனர்கள் இவர்களைத் தாக்கி எதிர்ப் பிரசாரம் செய்து இவர்கள் செல்வாக்கைக் குறைத்து விட்டனர். மேலும் அக்காலத்து வைதீகப் பிராமணர். சைவ சமயத்தையும் வெறுத்தார்கள். சைவரின் சிவலிங்க வழிபாடு அக் காலத்து வைதீகப் பிராமணருக்குப் பிடிக்கவில்லை. “சிசன தேவர்” என்று சிவபெருமானை அவர்கள் நிந்தித்து இகழ்ந்தார்கள். இதனால், அந்தக் காலத்தில் வைதீகப் பிராமண மதம் மங்கி மடங்கிக் கிடந்தது.