உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

களப்பிரர் ஆட்சி

|

கடுங்கோன்

1. (களப்பிரரிடமிருந்து பாண்டி நாட்டை

மீட்டுக்கொண்ட பாண்டியன்) |

2. அவனி சூளாமணி மாறவர்மன்.

3. செழியன் வானவன் சேந்தன்.

|

4. அரிகேசரி அசமசமன் மாறவர்மன்

5. செழியன் ரணதீரன்

|

|

6. தேர்மாறன் இராஜ சிம்மன் - 1

|

/67

7. ஜடிலன் பராந்தகன் நெடுஞ்சடையன் (வேள்விக்குடி செப்பேட்டுச் சாசனம் வழங்கியவன்)

இனி, சுப்பிரமணிய ஐயரின் ஆராய்ச்சியைச் சீர்தூக்கிப் பார்ப்போம். முதலாவதாக: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் களப்பிர அரசர் வென்று பாண்டி நாட்டினைக் கைப்பற்றினர் என்று வேள்விக் குடி சாசனம் கூறுவதாகச் சுப்பிரமணிய ஐயர் கூறுகிறார். இவர் கூறுவது தவறு. சாசனம் இவ்வாறு கூறவில்லை. முதுகுடுமிப் பெருவழுதி, வேள்விக் குடி என்னும் ஊரைக் கொற்கை கிழான் கொற்றன் என்பவனுக்குத் தானமாகக் கொடுத்தான் என்று சாசனம் கூறுகிறதே தவிர, அவனைக் களப்பிரர் வென்றதாகக் கூறவில்லை. சாசனத்தின் வாசகம் இது:

"கொல்யானை பல ஓட்டிக் கூடா மன்னர் குழாந்தவிர்த்த பல் யானை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதி ராஜனாக மா மலர்ச் சோலை நளிர் சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்ற மென்னும் பழனக்கிடக்கை நீர் நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட ஸ்மிருதி மார்க்கம் பிழையாத கொற்கைகிழா னற்கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்க கேள்வி அந்தணாளர் முன்பு கேட்க என்றெடுத் துரைத்து வேள்விசாலை முன்பு நின்று வேள்விகுடி என்றப் படியைச்