உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

/87

உ. தேவுந்தர நகரத்தில் இருந்த பழைய வருணன் கோயில், பிற் காலத்தில் (15-ஆம் நூற்றாண்டில்) விஷ்ணு கோயிலாக மாற்றப் பட்டபோதிலும் அக்கோயிலில் வருணன் வழிபாடு அறவே மறக்கப்படவில்லை. விஷ்ணு வழிபாட்டுடன் பழைய வருணன் வழிபாடும் நடைபெற்று வந்தது. வருணனுக்குரிய சிறப்புப் பொருள் முத்துக் குடையாகும். வருணன், கடல் தெய்வம் ஆகையினால், கடல் படுபொருள்களில் சிறந்ததும் விலை யுயர்ந்ததும் ஆகிய முத்துக்குடை வருணனுக்குரிய சிறப்புப் பொருள் ஆம். தேவுந்தர நகரத்துக்கோயில் இப்போது விஷ்ணு கோயிலாகக் கருதப்படுகிறபோதிலும் அங்கு நடைபெறுகிற ண்டுவிழாக் காலத்தில் வருணனுடைய முத்துக் குடை ஊர்வலம் சிறப்பாகக் செய்யப்படுகிறது. அன்றியும் அக் கோவிலில் சத்ரக் கிருகம் என்னும் திருவுண்ணாழிகை உண்டு. சத்ரக் கிருகம் என்றால் குடை இருக்கும் அறை என் என்பது பொருள். வருணனுடைய முத்துக் குடை அங்கு வைக்கப் பட்டிருக்கிறது. இதனால் உபுல்வன் கோயில் என்பது வருணன் கோயில் என்பது நன்கு விளங்குகிறது.

விஷ்ணுவுக்குச் சிறப்பு செய்வதென்றால், திருவிழாக் காலத்தில் விஷ்ணுவுக்குரிய சக்கரம் (சக்கரத்தாழ்வார்) அல்லவோ வீதிவலம் வரவேண்டும்? அதுவன்றோ மரபு? அவ்வாறில்லாமல், முத்துக் குடை முதன்மை இடம்பெற்று ஊர்வலம் வருகிறது என்றால், அது வருணனுக்குரிய சிறப்பு விழா என்பதில் ஏதேனும் ஐயம் உண்டா?

பழமையாகத் தொன்றுதொட்டு இலங்கையில் தேவுந்தர நகரத்திலே இருந்த வருணன் கோயிலைப் பிற்காலத்தில் விஷ்ணு கோயிலாக மாற்றிவிட்டபோதிலும், உபுல்வன் முழுவதும மறக்கப் படவில்லை. உபுல்வன் (வருணன்) உதகபாலனாகிய வருணனே. உத்பலவருணன் என்பது உபுல்வன் ஆயிற்று என்பதும் தவறு. உபுல்வன் என்னும் சிங்களச் சொல்லிலிருந்து உத்பலவர்ணன் என்னும் சொல் கற்பிக்கப்பட்டு, பிறகு அச்சொல் விஷ்ணுக்குப் பெயர் என்று கூறப்பட்டது. இது ஆராய்ச்சியில் பிழைபடுகிற தென்பது மேலே விளக்கப்பட்டது.

கி.மு 3-ஆம் நூற்றாண்டிலிருந்து, அசோக சக்கரவர்த்தி காலம் முதல், இலங்கை பௌத்தமத நாடாக இருந்து வருகிறது. பௌத்த