உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

89

வரும் பௌத்த மதமும் அப்பகுதியில் இல்லை. அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்தவர் நாகரும், இயக்கரும், வேடரும் ஆவர் அவர்கள், தமிழரைப் போலவே வருணன், முருகன், திருமால் முதலிய தெய்வங்களை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், கடல் கோள்களினால் நிலம் உடைப்புண்டு இலங்கை தனித் தீவாகப் பிரிந்துபோன பிறகும், இத்தெய்வங்களையே அவர்கள் வணங்கி வந்தார்கள்.

பிறகு, ஏறக்குறைய கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், விசயன் என்னும் வடநாட்டரசன் தனது தோழர்களுடன் இலங்கைக்கு வந்து, அங்கிருந்த இயக்கர், வேடர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான் விசயனும் அவனைச் சேர்ந்தவர்களும் பாண்டியன் மகளையும் பாண்டி நாட்டுப் பெண்களையும் முறையே மணஞ் செய்து கொண்டனர். இவர்களின் சந்ததியார்தான் சிங்களவர். பின்னர் நாகர் இயக்கர் முதலியவர்களும் சிங்களவருடன் கலந்து சிங்களவராயினர். ஆனால், அந்தக் காலத்திலும் பழைய வருணன் முருகன் திருமால் வணக்கம் நிலைபெற்றிருந்தது.

பின்னர், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், இந்திய நாட்டை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி காலத்தில், பௌத்த மதம் இலங்கை யிற் பரவிற்று. பௌத்த மதம், கி.மு. மூன்றாம் நூற்றாண்டி லிருந்து இன்று வரையிலும் இலங்கையில் நிலைத்து நிற்கிறது. பௌத்தம், இலங் கையிலே முக்கிய மதமாக இருந்தபோதிலும், அங்குப் பழைய தெய்வங்களின் வணக்கமும் இன்றளவும் இருந்து கொண்டிருக் கின்றன. திருமால், முருகன், வருணன் ஆகிய பழைய தெய்வங்களைச் சிங்களவர் இன்றும் மறந்து விடவில்லை. முருகனைக் கந்தகுமரன் என்றும், திருமாலை விஷ்ணு என்றும் வருணனை உபுல்வன் என்றும் சிங்களவர் கூறுகின்றனர். தமிழரின் பழங் கடவுளராகிய சேயோனும் மாயோனும் வருணனும் இலங்கைத் தீவிலே சிங்களவரால் இன்றும் போற்றப்படுகின்றனர்.

ஆனால், இந்தத் தெய்வங்கள், புத்தர்பிரானுக்குக் கீழடங்கிய சிறு தெய்வங்களாகக் கருதப்படுகின்றனர். பௌத்தமதம் செல்வாக்கடைந்த பிறகு இத்தெய்வங்களின் நிலை சற்று இறங்கிய போதிலும், பௌத்த மதம் வருவதற்கு முன்பு இத்தெய்வங்கள் முதன்மை பெற்றிருந்தன. இந்தத் தமிழ்த்தெய்வங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இலங் கையில் வணங்கப்பெற்றன என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.