உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இந்தக் காரணத்தினால்தான், கண்ணகியார் தாம் அணிந்திருந்த விலை யுயர்ந்த மற்ற நகைகளை யெல்லாம் மாதவியின் செலவுக்காகக் கோவலனிடம் கொடுத்து விட்ட பிறகு இவற்றை மட்டும் கொடுக்காமல் தம்மிடமே வைத்துக் கொண்டார். கடைசியாகக் கண்ணகியாரிடம் எஞ்சி இருந்தவை கைவளைகளும் காற்சிலம்புகளுமே என்பதை யறிகிறோம். கடைசியாகக் காற்சிலம்பையும் விற்கவேண்டிய நிலை கோவலனுக்கு ஏற்பட்டது.

சிலம்புக்குக் குடைச்சூல் என்னும் பெயரும் உண்டு. சங்க காலத்தில் வழங்கிவந்த இச்சொல் பிற்காலத்தில் வழக்கிழந்து விட்டது.

66

வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை

ஆன்ற அறிவில் தோன்றிய நல்லிசை

ஒண்ணுதல் மகளிர்.

(பதிற்று. 6 ஆம் பத்து. 7)

(குடைச்சூல்-சிலம்பு. பழைய உரை.)

66

அவ்வரிக் குடைச்சூல்

அணங்கெழில் அரிவையர்." - (பதிற்று. 7 ஆம் பத்து. 8)

கண்ணகி, பெருஞ்செல்வனான மாநாய்கனின் மகளாதலின், அவருடைய காற்சிலம்பு (குடைச்சூல்) பொன்னாற் செய்யப்பட்டு அதன் உள்ளில் மாணிக்கக்கற்கள் பரலாக இடப்பட்டிருந்ததுமன்றி அதன் மேற்புறத்தில் இடையிடையே மாணிக்கக்கற்களும் வயிரக்கற்களும் பதிக்கப்பட்டிருந்தன என்று சிலப்பதிகாரங் கூறுகிறது.

"மந்தக மணியொடு வயிரங் கட்டிய

பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல்

வணம்

சித்திரச் சிலம்பு.

(கொலைக்கள. 117-119)

(மத்தகமணி - தலையான மாணிக்கம். வயிரம் - வயிரக்கல். பத்திக்கே பத்தியாக வகுத்த கேவணம். கேவணம்-கல்லழுத்துங்குழி.)

-