உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

வசனமாகச் சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதை இளங்கோ அடிகள் கவிதையாகக் கூறிக் காவியத்தைச் சிறப்புறச் செய் துள்ளார். காவியப் புலவரின் வாக்குத் திறமையினால் இக்கவிதைகள் கற்பவர் உள்ளத்தைக் கவர்ந்து கொள்கின்றன அல்லவோ?

வாய்விட்டுப் புலம்பினர்

பத்தினிக் கோட்டத்தில் வழிபாடு நடந்த பின்னர், எல்லோரும் சென்றுவிட்டனர். ஆனால், நம்முடைய பெண்மணிகள் நால்வரும் அங்கேயே தங்கியிருந்தனர். இவர்கள் தனியே கோயிலில் சென்று பத்தினித் தெய்வ உருவமாகக் காட்சியளிக்கிற கண்ணகியின் சிலையை உயிருள்ள கண்ணகியாகவே கருதிக் கொண்டு தங்கள் மனத்திலிருந்த கருத்தை வாய்விட்டுக் கூறினார்கள். இவர்கள் வாய்விட்டு வருந்திக் கூறியதையும் காவியப் புலவர் இளங்கோ அடிகள் அழகாக இனிய கவிதைகளாக அமைத்துக் கூறுகிறார். இந்தக் கவிதைகளும் எழிலோடும் இனிமையோடும் சுவை பயக்கின்றன. கவிதையைப் படியுங்கள்:

தேவந்தி புலம்பியது:

"செய்தவம் இல்லாதேன், தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணரா திருந்தேன். மற்றேன்செய்தேன்! மொய்குழல் மங்கை! முலைப்பூசல் கேட்டநாள் அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ, தோழி! அம்மாமி தன்வீவும் கேட்டாயோ தோழி!

காவற் பெண்டு புலம்பியது:

“கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவுங் கேட்டாயோ, அன்னை! மாநாய்கன் தன்துறவுங் கேட்டாயோ, அன்னை!

அடித்தோழி புலம்பியது:

66

“காதலன் தன்வீவும் காதலிநீ பட்டதூஉம்

ஏதிலார் தாங்கூறும் ஏச்சுரையுங் கேட்டேங்கிப்

போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதா - னம்புரிந்த