உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

119

யரசாண்ட சந்திரகுப்த மௌரியன் காலத்தில் சமண சமயம் தென்னிந்தி யாவில் பரவிற்று. சந்திர குப்த மௌரியனுடைய பேரனான அசோக சக்கரவர்த்தியின் காலத்தில் பௌத்த மதம் தென்னிந்தியாவில் வந்து பரவிற்று. அசோக சக்கரவர்த்தி எழுதி வைத்துள்ள பிராமி எழுத்துக் கற் சாசனங்களில் இரண்டு, அவர் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பௌத்த மதத்தைப் பரவச் செய்தார் என்பதைக் கூறுகின்றன. தமிழகத் திலும் சிங்களத் தீவிலும் (இலங்கைத் தீவு) பௌத்த மதப் பிரச்சாரஞ் செய்வதற்காகப் பௌத்தப் பிக்குகளை அவர் அனுப்பி வைத்த செய்தி அந்தச் சாசனங்களில் கூறப்படுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டி லிருந்து தமிழகத்தில் வளரத் தொடங்கின பௌத்த மதம் சீத்தலைச் சாத்தனார் வாழ்ந்திருந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் நிலைத்தது - அதுபோலவே ஆருகத (ஜைன) மதமும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கித் தமிழகத்தில் பரவியிருந்தது. பௌத்த மும் சமணமும் சங்க காலத்தில் வளர்ந்து வந்தன என்றால், தமிழரின் பழைய சமயங்களான சைவமும் வைணவமும் அழிந்து விட்டன என்பது பொருள் அன்று. மாயோன் சேயோன், கொற்றவை, வருணன், வேந்தன் (இந்திரன்) முதலான தெய்வ வழிபாடு தொன்று தொட்டு இருந்து வந்தன. அவற்றோடு பௌத்தமும் சமணமும் ஒன்றி வளர்ந்தன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில் ஐந்நூறு ஆண்டுக்காலம், சாக்கிய (பௌத்த) மதமும், ஆருகத (ஜைன) மதமும, சீத்தலைச் சாத்தனாரும், இளங்கோ வடிகளும் வாழ்ந்திருந்த கடைச்சங்க காலத்தின் இறுதி வரையில் நன்றாக வளர்ந்து வந்தன. அந்தக் காலத்தில் சமயப் பூசல்களும், மதக் கலகங்களும், தமிழகத்தில் தோன்றவில்லை. மதக் காழ்ப்பும் சமயச் சண்டைகளும் கடைச் சங்க காலத்துக்குப் பிறகு, களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தலையெடுத்துத் தமிழகத்தின் அமைதி வாழ்க்கையை குலைத்துவிட்டன. ஆனால், பிற்காலத்தில் நிகழ்ந்த இந்த அவல நிலை சீத்தலைச் சாத்தனாரும் இளங்கோ வடிகளும் வாழ்ந்திருந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஏற்படவில்லை. அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்த சீத்தலைச் சாத்தனாரும் இளங்கோவடிகளும், சமய வெறி இல்லாத காலத்தில் வாழ்ந்தனர். பொதுமக்கள் வாழ்க்கையில் சமய வெறியும், மதப் பூசலும் அக்காலத்தில் இல்லையென்றாலும், கற்றவர் இடையில் அவை இங்கும் அங்கும் தலைகாட்டின என்பதையும் அறிகிறோம்.

தமிழரான சாத்தனார் தாய் மொழியாகிய தமிழைக் கற்றுப் புலவராக விளங்கினார். மற்றும், பௌத்தர் என்னும் முறையில் அவர்