உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

பௌத்த சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்தர். பௌத்த சமய நூல்கள் அந்த மதத்தின் 'தெய்வ பாஷை' யான மாகதி என்னும் பாலி மொழியில் எழுதப் பட்டிருந்த படியால் சாத்தனார் பாலி மொழியைக் கற்றுப் பௌத்த மத நூல்களைப் பயின்றார். பௌத்த பிக்குகள் பாலி மொழியை நன்றாகக் கற்றவர்கள். அவர்களிடத்தில் சாத்தனார் பாலி மொழியைக் கற்றிருக்க வேண்டும். தமிழகத்துக்கு அடுத்திருந்த ஈழ (இலங்கை) நாட்டில் பௌத்தமும் நன்றாகப் பரவி பெளத்த மதத்தின் நிலைக்களமாக இருந்தது. ஈழநாட்டில் பௌத்தமும் பாலி மொழியும் சிறந்து வளர்ந் திருந்தன. அரசியல், வாணிகம், சமயம் ஆகிய மூன்று வழியிலும் ஈழ நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் நெருங்கின. தொடர்பு அக்காலத்தில் இருந்தது. இந்தச் சூழ்நிலை, சாத்தனார் பாலி மொழியை நன்கு கற்பதற்குப் பெரிய வாய்ப்பாக இருந்தது. பாலி மொழி வாயிலாக அவர் பௌத்த மதத்தை நன்றாகப் பயின்றார் என்பதை அவர் எழுதிய மணி மேகலை காவியத்திலிருந்து அறிகிறோம். பாலி மொழியைப் பயின்ற வர்க்குச் சம்ஸ்கிருத மொழி எளிதாக இருக்கும். சம்ஸ்கிருதம் படித்த வருக்குப் பாலி மொழி எளிதாகக் கைவரும். பாலி மொழியில் வல்லவ ரான சாத்தனார் எளிதில் சம்ஸ்கிருத மொழியையும் கற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் தமிழ், பாலி சம்ஸ்கிருதம் ஆகிய மும்மொழியிலும் வல்லவர் என்பதை அவருடைய மணிமேகலை காவியத்திலிருந்து அறிகிறோம்.

சாத்தனாருடைய நண்பரும் சிலப்பதிகாரக் காவியத்தின் ஆசிரியருமான இளங்கோவடிகளும் மும்மொழிப் புலமை வாய்ந்தவர். தமிழில் பெரும் புலவராக விளங்கின அவர் தாம் சார்ந்திருந்த ஆருகத (ஜைன) சமயத்தை அறிவதற்கு அந்த மதத்தின் 'தெய்வ பாஷை'யான அர்த்தமாகதி என்னும் சூரசேனி மொழியைக் கற்றவர். மாகதி (பாலி) மொழியைப் போலவே அர்த்தமாகதி (சூரசேனி) மொழி யும் பிராகிருத மொழியைச் சேர்ந்தது. ஜைன சமயத்தார் தங்களுடைய ஆருகத மத நூல்களை அர்த்தமாகதியில் எழுதி வைத்தனர். சமண ராகிய இளங்கோ வடிகள் அந்த மதத் தத்துவங்களை அறிவதற்கு அர்த்த மாகதியைக் கற்றார். அதைக் கற்ற அவருக்கு சம்ஸ்கிருதமும் எளிதில் கைவந்த மொழியாயிற்று. அடிகளுடைய சிலப்பதிகாரக் காவியத்தைப் படிக்கும்போது இவருடைய சீத்தலைச் சாத்தனார், கூல வாணிகர் என்னும் நிலையிலும் பௌத்த சமயத்தவர் என்னும் நிலையிலும் பல நாடுகளைச் சுற்றிப் பிரயாணம் செய்தவர் என்பதை அவருடைய காவியத்திலிருந்து அறிகிறார். சங்கப் புலவர்