உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

121

தமிழகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்தவர்கள். சீத்தலைச்சாத்தனார் புலவர் நிலையிலும் வாணிகர் நிலையிலும் பௌத்த மதத்தவர் என்னும் நிலையிலும் தமிழகம் முழுவதும் பிரயாணம் செய்திருக்கிறார். அன்றி யும் அவர் ஈழ நாட்டிலும் சில முக்கியமான இடங்களுக்குச் சென்றிருக் கிறார். இவற்றை இவருடைய காவியத்திலிருந்து அறிய முடிகிறது. சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினம் சேர நாட்டு வஞ்சி நகரம் தொண்டை நாட்டுக் காஞ்சிபுரம் முதலான ஊர்களை இவர் தம்முடைய மணிமேகலையில் கூறியிருப்பதைப் படிக்கும்போது இவ்வூர்களை அவர் நேரில் கண்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது. நேரில் கண்டிரா விட்டால் இவ்வூர்களை இவ்வளவு தெளிவாகக் கூறியிருக்க முடியாது.

சேர நாட்டுத் தலைநகரமான வஞ்சிமா நகரத்துக்கு இவர் பல முறை சென்றிருக்கின்றார் என்பது தெரிகிறது. வஞ்சி நகரம் மதில் சூழ்ந்த கோட்டைக்குள் இருந்தது. கோட்டை மதிலின் கிழக்கு வாயிலுக்கு (குணவாயிலுக்கு) அருகில் இவருடைய நண்பரான இளங் கோவடிகள், சமணத் துறவியாகி அருகன்கோட்டத்தில் தங்கியிருந்தார். வஞ்சி மா நகரத்துக்குப் போன போதெல்லாம், சாத்தனார், நகருக்கு வெளியே அருகன்கோட்டத்தில் இருந்த இளங்கோவடிகளைக் கண்ட பிறகு நகரத்துக்குள்ளே இருந்த அரண்மனைக்குச் சென்று சேரன் செங்குட்டுவனைக் காண்பது இவருடைய வழக்கமே என்பது தெரிகிறது. வஞ்சிமா நகரத்தை இவர் நன்றாக அறிந்திருந்தார் என்பதை, இவருடைய மணிமேகலை காவியத்தில் ‘சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை’, 'சச்சிமாநகர்புக்ககாதை’ என்னும் இரண்டு காதைகளில் இவர் அந்நகர அமைப்பைக் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

சீத்தலைச் சாத்தனாரும் இளங்கோ அடிகளும் தங்கள் காவியங் களைப் பாடத் தொடங்கின காரணம் தற்செயலாக நேர்ந்தது. தற் செயலாக நேரிட்ட சூழ்நிலை இது: சேரன் செங்குட்டுவன், மலை மேலிருந்து பேரியாறு இழிகிற இடத்தில் கூடாரம் அமைத்துச் சுற்றத் தோடு போய்த் தங்கி வேனிற் காலத்தைக் கழிப்பது வழக்கம். இந்தச் செய்தியைப் பரணர் செங்குட்டுவனைப் பாடிய (பதிற்றுப்பத்து) ஐந்தாம் பத்தில் கூறுகிறார். செங்குட்டுவன் ஆண்டுதோறும் வேனிற் காலத்தில் மலையடிவாரஞ் சென்று 'பொழில் வதி வேனில் பேரெழில் வாழ்க்கை’ நுகர்வது வழக்கம் என்று பரணர் கூறுகிறார்.* (*பதிற்றுப்பத்து, 5-ம் பத்து, 8-ம் செய்யுள்) செங்குட்டுவனுடைய 'பொழில் வதி வேனில் பேரெழில் வாழ்க்கையை'ப் பரணர் கூறுவது போலவே, சிலப்பதிகாரத்திலும்