உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இளங்கோவடிகள் கூறுகிறார். 'மஞ்சு சூழ்சோலை மலை'க்குப் போய்ப் 'பெருமலை விலங்கிய பேரியாற்றடைகரை கருமணல் எக்கரில்' செங்குட்டுவன் சுற்றத்தோடு தங்கியதைச் சிலப்பதிகாரம் காட்சிக் காதையில் கூறுகிறார். எனவே இது செங்குட்டுவன் வாழ்க்கையில் ஆண்டுதோறும் வழக்கமாக நிகழ்ந்த நிகழ்ச்சி என்பது தெரிகிறது.

செங்குட்டுவன் மலையடிவாரத்துக்குப் போய்த் தங்கும் போது அவனுடைய தம்பியாரான இளங்கோவடிகள் அங்குச் சென்று அவனைக் காண்பது வழக்கம். செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் அரண்மனையில் இருக்கும் போது, நகரக்கிழக்கு வாயிலில் அருகன் கோட்டத்தில் இருந்த இளங்கோவடிகள் அரண்மனைக்குப் போய்த் தமயனைக் காண்பது வழக்கமில்லை. ஏனென்றால், துறவிகள் தங்களுடைய உறவினர் வீட்டுக்குப் போவது கூடாது என்பது துறவற ஒழுக்கம் ஆகும். ஆகையால் இளங்கோ அடிகள், தமயன் செங்குட்டு வனை நகரத்தில் உள்ள அரண்மனைக்குப் போய்க் காணவில்லை. அரசன் என்னும் நிலையில் செங்குட்டுவன் இளங்கோ அடிகளிடம் செல்லவில்லை. ஆனால் இருவருக்கும் உடன்பிறப்புப் பாசம் அகல வில்லை. இந்த நிலையில் இளங்கோ அடிகள் செங்குட்டுவன் மலையடிவாரத்துக்குச் செல்லும்போது அங்குச் சென்று கண்டுவருவது வழக்கமாக இருந்தது. சமயம் நேரும்போது சீத்தலைச்சாத்தனார் இளங்கோ அடிகளோடு போய்ச் செங்குட்டுவனை மலையடிவாரத்தில் காண்பது உண்டு.

ஒரு வேனிற்காலத்தில் செங்குட்டுவன் வழக்கம்போல மலையடி வாரஞ் சென்று தங்கியிருந்தபோது இளங்கோ அடிகள் அங்குச் சென்றார். சீத்தலைச் சாத்தனாரும் அவ்விடஞ் சென்றார். அப்போது ஒரு நாள் குன்றக் குறவர் கூட்டமாக வந்து செங்குட்டுவனுக்குக் கை யுறை கொடுத்து வணங்கினார்கள். வணங்கித் தங்கள் குறிச்சியில் தாங்கள் கண்ட செய்தியைக் கூறினார்கள். 'வேங்கை மரத்தின் அடியில் ஒரு காரிகை வந்து தங்கினாள். அவள் உயிர் அங்குப் பிரிந்து விட்டது. உயிர்விட்ட அவள் யாரோ, என்னாட்டவளோ அறியோம்' என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த சாத்தனார், கண்ணகியின் செய்தியைக் கூறினார். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்ததும் கோவலன் கொலைப்பட்டதும கண்ணகி மதுரையைத் தீயிட்டுக் கொளுத்தியதையும் பிறகு அவள் நகரத்தைவிட்டுப் போய்விட்ட தையும் தெரிவித்து, குன்றக் குறவர் கூறிய வேங்கை மரத்தின் கீழ்