உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

சம்ஸ்கிருத மொழியில் புத்தர் உபதேசங்களை எழுதி வைப்பது கூடாது. அப்படிச் செய்வது பெருந்தவறாகும். புத்தருடைய உபதேசங்களை மக்களுக்கு விளங்குகிற அந்தந்த நாட்டு மொழிகளிலே போதிக்க வேண்டும் என்று கூறினார். இந்தச் செய்தி பௌத்தருடைய பிடக நூல்களில் ‘சுல்லவக்க’ என்னும் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது.

பௌத்தராகிய சீத்தலைச் சாத்தனார் இந்தக் கருத்தை நன்றாக அறிந்தவராகையால், பௌத்தக் கொள்கைகளைக் கூறுகிற மணி மேகலை காவியத்தை உயர்ந்த சங்கத் தமிழ் நடையில் புலவர்கள் மெச்சும் காவிய நடையில் எழுதாமல், எல்லோருக்கும் விளங்குகிற எளிய நடையில் தமிழ் மரபு குன்றாத நடையில் எழுதினார். மணி மேகலை பௌத்த மதக் காவியம் ஆகையால் அதை மதப்பிரசார நோக்கத் தோடு எளிய நடையில் எழுதினார். இதனால்தான் இவர் காலத்துச் சங்கத் தமிழ் நடைக்கும் இவருடைய மணிமேகலை காவியத்துக்கும் மொழி நடையில் பெருத்த வேறுபாடுகள் காணப் படுகின்றன. இந்த பௌத்த சமய மரபை அறியாதவர்கள், மணி மேகலையின் எளிய நடையின் காரணத்தை யறியாமல், சங்கச் செய்யுள் நடைக்கும் மணிமேகலைச் செய்யுள் நடைக்கும் வேறுபாடு தோன்றுகிறபடியால் மணிமேகலை சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூல் என்று கூறுவாராயினர். அவர்களுக்குப் பௌத்த மரபுதெரியாதபடியால் இவ்வாறு தவறாகக் கூறுகிறார் கள். அவர்களுடைய தவறான கருத்து மெய் போலத் தோன்றுகிற படியால் மற்றவர்களும் இவர் கூறுவது உண்மை என்று கருதுகின்றனர். இக்கருத்து தவறானது. மணிமேகலை காவியம் கடைச்சங்க காலத்து (கி.பி. 2-ம் நூற்றாண்டின் பிற்பாதியில்) எழுதப்பட்ட நூல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

சமய

மணிமேகலை காவியத்தை எழுதிய சீத்தலைச் சாத்தனாரே சங்கத் தமிழ் நடையில் வேறு சில செய்யுட்களைப் பாடியுள்ளார். அந்தச் செய்யுட்கள் சங்கத்தொகை நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. |5b|60| 53, 134, 229, 306, 320. (5mi65605 154. 5m 60600T 36, 127, 339. புறாநனூறு, 59. பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் பாடியது.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரைப்பற்றி வ்வளவுதான் அறிய முடிகிறது. சீத்தலைச் சாத்தனாரைப் பற்றிப் பிற்காலத்தவர் கற்பித்த கதைகள் பல உள்ளன.