உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பத்தினிச் செய்யுளும், கண்ணகியும்

யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலிலே அதன் விரிவுரைதாரர் ஒரு வெண்பாவை மேற்கோள் காட்டி அதனைப் பத்தினிச் செய்யுள் என்று கூறியுள்ளார். அந்தச் செய்யுள் இது.

66

"கண்டகம் பற்றிக் கடகமணி துளங்க

ஒண்செங் குருதியின் ஓஓகிடந்ததே - கெண்டிக்

கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை.

இந்த வெண்பாவைப்பற்றிச் சில அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து விசித்திரமான முடிவு கூறியுள்ளனர். இந்தச் செய்யுளைப் பாடியவர் சிலப்பதிகாரக் காவியத் தலைவியாகிய கண்ணகியார் என்றும், கோவலன் கண்ணகியின் வரலாறு இதில் கூறப்படுகிறது என்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். இதனோடு நிற்கவில்லை. இது, சிலப்பதி காரக் காவியம் இயற்றப்படுவதற்குமுன்னே பாடப்பட்ட செய்யுள் என்றும், ஒரு பழைய கதையை இது கூறுகிறது என்றும், அந்தப் பழைய கதையை ஆதாரமாகக்கொண்டு பிற்காலத்திலே சிலப்பதிகாரக் காவியம் இயற்றப்பட்டதென்றும் எழுதியுள்ளார்கள். இவர்கள் கருத்து செம்மையானதுதானா, இவர்கள் ஆராய்ச்சி சரியா என்பதைப் பார்ப்போம். முதலில் இந்த அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இந்தப் பத்தினிச் செய்யுளைப்பற்றி முதன்முதலில் ஆராய்ந் தவர் திரு. மு. இராகவையங்கார் அவர்கள். இவர், தமது “ஆராய்ச்சித் தொகுதி” என்னும் நூலில் “கண்ணகியின் தமிழ்ப் புலமை” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:-

"இனி, இப்பத்தினிச் செய்யுளை நோக்குமிடத்து, இது, தம் இன்னுயிர்க் கணவன் வெட்டுண்டு வீழ்ந்த நிலைகண்டு புலம்பிப் பாடியதாதல் தெரியலாம். சங்க காலத்தே பத்தினித் தேவி என்று பரவப்பெற்றவளும், பாண்டியன் ஏவலால் வெட்டுண்டு வீழ்ந்த கணவனுக்காகப் பரிந்து செயலற்று நின்றவளும் கோவலன்