உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

-

மனைவியே என்பது சொல்லவும் வேண்டுமோ? இவ் வெண்பாவில், கெழுதகைமை யில்லேன் பன்னாள் அழுத கண்ணீர்

துடைத்த கை' என்று கூறப்படுவதால் கணவனுடன் தனக்கு நெடுங்காலம் கூட்டமின்றிப் பிரிவு நிகழத் தன் நாயகன் பின்பு தலை யளி செய்து போந்தமையும் நன்கு விளங்கும். அங்ஙனம் பன்னா ளாழுத கண்ணீரை மாற்றி அருள்புரிந்தது அவன் கரமேயாதலின், அக்கரம் தன்முன் குருதியளைந்து கிடக்கு நிலைக்கு வருந்தி ஒண்செங் குருதியின் ஓஒ கிடந்ததே’ என்று புலம்பிப் பாடினள் நம் பத்தினிதேவி என்க

66

“கண்பொழி புனல்சோரக் கடுவினை யுடையேன்முன் புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ’

என்றிவ்வாறு கண்ணகி, வெட்டுண்ட கணவன்முன் புலம்பி நின்ற நிலையை இளங்கோவடிகள் கூறுதலுங் காண்க இத்தகைய அரிய பத்தினிப் பாட்டை இளங்கோவடிகள் எடுத்தாளாமைக்குக் காரணந் தெரிந்திலது. ஆயினும் இச்செய்யுள் பத்தினித் தேவியது என்ற வழக்குப் பழமையானதென்பதிற் சிறிதும ஐயமில்லை" (பக்கம்

237-238)

திரு. S. வையாபுரிப் பிள்ளையவர்கள் இச்செய்யுளைப்பற்றித் தமது “இலக்கிய மணிமாலை" (1954) என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்.:-

ஒருத்தி தன் கணவன் கொலையுண்டு கிடந்த நிலைகண்டு பாடியதாக ஒருெ வெண்பா இவ் விருத்தியில் (யாப்பருங்கல விருத்தியில்) காணப்படுகிறது. இதனைப் ‘பத்தினிச் செய்யுள் என்று விருத்தியுரைகாரர் கூறினர். பத்தினி யொருத்தியின் வரலாறு பற்றியதென்று இது கொள்ளத்தக்கது. ஊர்சூழ் வரியை நோக்குமிடத்து (சிலம்பு XIX 39-50) இப்பத்தினி கண்ணகியாகலா மென்பது புலப்படும். இவள் வரலாறு ஒருபடியாக உருப்பெற்ற காலத்து, அவலச்சுவை மிகுந்த இப்பகுதியுடன் பிற கதைப் பகுதிகளையும் அமைத்து வெண்பாவினால் நூல் ஒன்று ஒரு கவிஞன் செய்திருந்தா னென்று கொள்ளலாம்" (பக்கம் 134)

வையாபுரிப் பிள்ளையவர்கள் தாம் எழுதிய "காவிய காலம்' என்னும் புத்தகத்திலும் இவ்வாறு எழுதுகிறார்:-

وو