உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

பெயருள்ளவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. அதுபோல ஒரு முலை குறைத்த பெண் மணிகளும் சிலர் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அவர்களைப்பற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

இதுகாறும் ஆராய்ந்தவற்றால், திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒருவர் அல்லர், வெவ்வேறு பெண்மணிகள் என்பதும வேங்கை மரத்தின்கீழ் இருந்தவர் என்பது காரணமாக இருவரையும் ஒருவராகப் பொருத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்க தன்று என்பதும் ஆகும். இவை பழங்கதைகள் அல்ல என்பதும், வெவ்வேறு இடத்தில் சங்க காலத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சிகள் என்பதும் அறியத்தக்கன.