உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

155

பொன் நிறத்தாள் கதை என்னும் ஒரு செய்யுள் நூல் உண்டு. தமிழ்ச் செய்யுள் இயற்ப்பட்ட இந்தக் கதை, இப்போது தமிழ் நாட்டில் மறைந்து விட்டது. ஆனால் மலையாள நாட்டில் வழங்கிவருகிறது. இத் தமிழ்நூலை மலையாள எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். ஆகவே, இதில் பல தமிழ்ச் சொற்கள் மலையாளச் சொற்களாகக் காணப்படுகின்றன. இந்நூல் திருவாங்கூரில் அச்சிடப்பட் டிருக்கிறது. (பொன் நிறத்தாள் கத, தெக்கன் பாட்டு, பாஷாகிரந்தாவலி, அங்கம் 88)

இந்தக் கதையில் பொன்நிறத்தாள் என்னும் அழகுள்ள பெண்மணி மணஞ்செய்துகொண்டு கணவனுடன் இன்பவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதும், பிறகு அவள் வயிறு வாய்த்துச் சூல்கொள்வதும் கூறுப்படுகிறது. சூல்கொண்ட பொன் நிறத்தாள், அருவியாட ஆசை கொண்டு மலைக்குப் போகிறாள். போகிற வழியில் மழைபெய்ய, அவள் ஓர் ஆலமரத்தின் அடியில் தங்குகிறாள். அந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு காளி கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் இருக்கிற புதையலைக் கைப்பற்றக் கள்ளர் சிலர் கருதுகிறார்கள். நிறை சூலி ஒருத்தியைக் காளிக்குப் பலியிட்டால் புதையலை எடுக்கலாம் என்று நம்புகிறார்கள். அவ்வமயம் காளிக்குப் பூசை செய்யும் பூசாரி அங்கு வருகிறான். அவனிடம் கள்ளர்கள் தங்கள் கருத்தைச் சொல்லு கிறார்கள். “கொங்கை நிறைந்த நிறை சூலி ஒருத்தி வேண்டும்' என்று கேட்கிறார்கள். அவன், “கொங்கை நிறைந்த நிறை சூலி” ஒருத்தியைத் தான் ஆலமரத்தின்கீழ்க் கண்டதாகக் கூறுகிறான். இங்கு, நிறைசூலி என்றுமட்டும் சொல்லாமல், "கொங்கை நிறைந்த நிறை சூலி"என்று கூறப்படுவதை வாசகர்கள் கவனிக்கவேண்டும். கொங்கை குறைந்தவள் (அறுத்தவள்) என்றும், கொங்கை நிறைந்தவள் என்றும் சொல் வழக்கு அக் காலத்தில் வழங்கியிருந்ததை இது தெரிவிக்கிற தல்லவா? இதிலிருந்து கணவனோடு வாழ்ந்து சூல் கொண்டு பிள்ளைப் பேறு அடைந்தவள் நிறை கொங்கையாள் என்றும், கணவனுடன் வாழும் வாழ்க்கையை இழந்தவள் குறை கொங்கையாள் என்றும் கூறப்படும் வழக்குச் சொல் இருந்தது என்பது என்பது கணவனுடன் வாழும் வாழ்க்கையை இழந்ததைக் குறிப்பதே என்பது நன்கு விளங்குகிறது.

6

6

வாசகர்களுக்கு இவ்விடத்தில் ஐயம் ஏற்படக்கூடும். கொங்கை குறைத்தல் என்பது இள மங்கையர் கணவனுடன் வாழும் வாழ்க்கை இழத்தல் என்று பொருள்படுமானால், இளங்கோவடிகள் ஏன் அச்