உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

சொல்லை அப் பொருளில் வழங்காமல், வேறு விதமாகப் பயன் படுத்துகிறார்?

66

66

'முத்தார மார்பில் முலைமுகந் திருகி

நிலைகிளர் கூடல் நீளெரி யூட்டிய

பலர் புகழ் பத்தினி

என்றும்,

99

"முதிரா முலைமுகத் தெழுந்த தீயின் மதுரை மூதூர் மாநகர்

66

சுட்டது

என்றும்,

66

“இடமுலை கையாற் றிருகி மதுரை

வலமுறை மும்முறை வாரா வலம்வந்து

மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள்

என்றும்

‘கலிகெழு கூடல் கதழெரி மண்ட

முலைமுகந் திருகிய பூவாமேனிப் பத்தினி

என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார். மணிமேகலைக் காவியத்திலும், சாத்தனார்,

66

“கண்ணீ ராடிய கதிரிள வளமுலை

திண்ணிதிற் றிருக்கித் தீயழற் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி மூட்டிய மாபெரும் பத்தினி”

என்று கூறுகிறார். ஆகவே கண்ணகியார் கொங்கையைப் பிய்த்தது உண்மையாகத்தானே இருக்கவேண்டும் - என்னும் கேள்வி எழுகிறது. இது சரியான கேள்வியே.

இளங்கோ அடிகளும் சாத்தனாரும் கோவலன் கண்ணகி யருடைய வரலாறு (Biography) எழுதவில்லை. அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆதாரமாகக்கொண்டு காவியம் எழுதினார்கள். இதை நாம் மறத்தல் ஆகாது. காவியம் எழுதுவது ..தான் இவர்களின் முக்கியமான கருத்து காவிய நூலில் கற்பனை இடம்பெறும்.