உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. யாரால் மழை பெய்கிறது?*

மழையின் பெருமையும் இன்றியமையாமையையும் உலகத்திலே எல்லா மக்களும் அறிந்திருக்கிறார்கள். மழையின் சிறப்பை ஏனையோர் அறிந்ததைவிட மிக நன்றாக அறிந்தவர் தமிழரே. ஏனென்றால், தமிழ் வேதம் எழுதி அருளிய திருவள்ளுவ நாயனார் வான்சிறப்பு என்றும் ஓர் அதிகாரம் வகுத்து அதில் மழையின் சிறப்பை எடுத்தோதியுள்ளார். சிலப்பதிகாரம் என்னும் ஆதித் தமிழ்க் காவியத்தை எழுதிய இளங்கோ அடிகள்,

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற் கவனளிபோல்

மேனின்று தான்சுரத்த லான்

""

என்று மழையைப் போற்றினார். இவ்வாறு மழையைப் போற்றிச் சிறப்பித்தவர் தமிழரைத் தவிர வேறு எம்மொழியாளர் உளர்?

பறவை, விலங்கு, மக்கள் முதலிய எல்லா உயிர்களும் உலகத் திலே உயிர்வாழவேண்டுமானால், புல்பூண்டு செடிகொடி மரம் ஆகிய தாவரங்கள் உலகத்தில் செழித்து வளரவேண்டும். ஓரறிவுயிராகிய மரம் செடி புல் பூண்டுகள் இல்லையானால், ஈரறிவுயிர்முதல் ஆறறிவுயிர் வரையில் எந்த உயிரும் உலகத்தில் உயிர்வாழ முடியாது. உலகம் முழுவதிலும் உள்ள தாவரங்களாகிய மரம் செடி கொடி புல் பூண்டுகளை ஒரே நாளில் முழுவதும் அழித்து விடுவோமானால், அப் பொழுதே உலகத்தில் வாழும் ஏனைய உயிர்கள் எல்லாம் மாய்ந்து உலகத்தில் உயிர்களே இல்லாமற்போகும். எனவே, ஓரறிவுயிராகிய தாவரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது ஏனைய உயிர்களின் வாழ்க்கை. எல்லா உயிர்களுக்கும் ஆதரவாக உள்ள தாவரங்களை உண்டாக்கி அவற்றை நிலைபெறச் செய்வது மழை. இதனால் அன்றே, 'விசும்பின் துளிவீழி னல்லால்மற் றாங்கே

66

பசும்புல் தலைகாண் பரிது"

என்றும்,

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.