உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

215

ஒழுக்கம் பிழையாமல் தவம் செய்தால் மழை பெய்யும்; நெறி தவறினால் மழை பெய்யாது என்றும் அவர்கள் கருதிவந்தார்கள்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை அரசாண்ட இளங்கிள்ளி என்னும் அரசன் காலத்தில் மழை பெய்யாமல் வற்கடம் உண்டாயிற்று. அப்போது மணி மேகலையார் அந் நகரத்திற்கு வந்தார். வந்தவரை அரசன் வரவேற்றான். வரவேற்று, மழையில்லாமல் நாடு அல்லற் படுவதன் காரணத்தைக் கூறுகிறான்:

“செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ

நலத்தகை நல்லாய்! நன்னா டெல்லாம் அலத்தற் காலை யாகிய தறியேன்.

(LD6Mfl., 28:188-91)

அரசன் செங்கோல் செலுத்தினால் மழைபெய்யும்; கொடுங்கோல் செலுத்தினால் மழைபெய்யாது என்பதைத் திருவள்ளுவரும் கூறுகிறார்.

66

66

'இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளுந் தொக்கு’

என்றும்,

'முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்

என்றும் அவர் கூறியது காண்க.

கற்புடைய மங்கையரால் நாட்டில் மழை

என்பதையும் திருவள்ளுவர் கூறுகிறார்:

"தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.

“வறனோடின் வையகத்து வான்தருங் கற்பினாள்

66

என்பது கலித்தொகை.

'புண்ணிய முட்டாள், பொழிமழை தரூஉம் அரும்பெறன் மரபிற் பத்தினிப் பெண்டிர்”

என்பது மணிமேகலை.

99

பெய்கிறது