உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

99

227

என்று கூறுகிறது. எனவே, அறவாழி அந்தணன் என்று திருக்குறள் கூறுவது ஜைனக் கடவுள் என்பது ஐயமற விளங்குகிறது. இது பற்றி இந்நூலில் வேறு இடத்திலும் கூறியுள்ளேன்.

ை ன

திருக்குறளில் ஜைனசமயக் கடவுள் கூறப்பட்டிருப்பதைக் காட்டினோம். இனி, ஜைன சமயத்தின் முக்கியக் கொள்கை திருக் குறளில் இருப்பதைக் காட்டுவோம். அஹிம்சைதான் ஜைன சமயத்தின் முக்கியமான கொள்கை; அஹிம்சையே ஜைனமதத்தின் உயிர்த்தத்துவம். “அஹிம்சா பரமோதர்மஹ” என்பதும், "தயா மூலதர்மம்” என்பதும் ஜைனசமயத்தின் முக்கியமான, முதன்மையான தத்துவம். அஹிம்சை என்னும் சொல், பல கருத்துகளை உள்ளடக்கி யுள்ள வார்த்தை. அதற்கு ஒரு வார்த்தையில் அர்த்தம் சொல்ல முடியாது. அன்புடைமை, தீங்கு செய்யாமை, கொல்லாமை முதலிய கருத்துகளைக் கொண்டது அஹிம்சை என்னும் சொல். இந்தக் கருத்து களைத் திருக்குறள் சில அதிகாரங்களினால் விளக்குகிறது. இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலிய அதிகாரங்களின் கருத்துகள் சேர்ந்ததுதான் அஹிம்சை என்பதன் உண்மைப் பொருள்.

கொல்லாமைக்கு அடுத்தபடியாக உள்ள ஜைனதருமம் பொய்யாமை என்பது. - அதாவது, மெய் பேசவேண்டும் என்பது. இந்த இரண்டு முக்கிய தருமத்தை,

66

"

'ஒன்றாக நல்லது கொல்லாமை, மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று

என்று திருக்குறள் கூறுகிறது. கொல்லாமை, பொய்யாமை இரண்டையும் இரண்டு கண்களாகக் கொண்டது ஜைன சமயம். ஆனால், கொலையைத் தடுக்கக்கூடுமானால், ஓர் உயிரைப் போக்குவதைத் தடுக்க வாய்ப்பு ஏற்படுமானால் அப்போது பொய் சொல்லியாகிலும் கொலையைத் தடுக்கலாம் என்பது ஜைனமதக் கொள்கை. அதாவது, ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்குமட்டும் பொய் சொல்லலாம். இதையும் திருக்குறள் கூறுகிறது.

"பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்