உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

என்று திருக்குறள் கூறுகிறது. இதனால், திருக்குறள் ஜைன சமயத் தின் கொல்லா விரதத்தை, அஹிம்சையை வற்புறத்துவது காண்க.

விதி, வினை, ஊழ் என்னும் நம்பிக்கையை மற்ற மதங்களைவிட அதிகமாக ஜைனசமயம் போற்றுகிறது. ஜைன சமய நூல்களிலெல்லாம், ஊழின் முக்கியத்துவத்தை பற்றி நெடுகக் காணலாம்.ஊழ்வினையில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள ஜைன சமயம், ஆள்வினையுடைமையாகிய முயற்சி யுடைமையிலும் உறுதியான நம்பிக்கை உள்ளது. உயிர்களின் ஊழ்வினையை மாற்றி நன்மையையோ தீமையையோ கொடுக்க ஜைன சமயக் கடவுளால் முடியாது. அவரவர் முயற்சியினாலேயே, அவரவர் நல்ல கதியையும் தீய கதியையும் அடையவேண்டும் என்பது ஜைனசமய நம்பிக்கை. இந்த ஜைனமதக் கொள்கையைத் திருக்குறளும் கூறுகிறது. 'ஊழ்' என்னும் அதிகாரமும், ‘ஆள்வினையுடைமை (முயற்சி என்னும் அதிகாரமும் திருக்குறளில் கூறப்படுவது ஜைனமதக் கருத்தைத் தழுவியதாகும்.

66

66

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்

என்று ஊழைப் பற்றிக் கூறிய திருக்குறள்,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்

என்னும் ஆள்வினையுடைமையைப் பற்றியும் கூறுகிறது.

கடைசியாக இதைச் சொல்லவேண்டும். எல்லா மதத்தாரும் திருக்குறளைத் தத்தம் நூலென்று கூறுகிறார்கள். போற்றுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஜைனரைத் தவிர மற்ற மதத்தினர் யாரும் திருக்குறள் எங்கள் வேதம், எங்கள் ஓத்து என்று கூறவில்லை. நீலகேசி என்னும் ஜைன நூலிலே, மொக்கவாதச் சருக்கத்தில், 60ஆம் செய்யுள் உரையிலே, சமய திவாகரவாமன முனிவர் என்னும் ஜைனர், "பொய்ம்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்

99

என்பது எம் ஓத்து (எங்கள் வேதம்) என்று எழுதுகிறார். இதுபோன்று, திருக்குறளை எங்கள் வேதம், எங்கள் ஓத்து என்று எழுதிய வேறு மதத்தினர் யாரெனும் உண்டா? சொல்லுங்கள்.