உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ஒரு குறளுக்குப் பௌத்த விரிவுரை*

மனித வாழ்க்கையில் இல்லறத்தை மேற்கொண்ட கணவனும் மனைவியும் ஒத்த மனத்தினராய்க் கூடி அடைகிற இன்பம் சிறந்தது. ஐம்பொறிகளின் வாயிலாக ஐம்புலனாலும் அடையப்படுவது இந்த இன்பம். இந்த இன்பத்தைச் சிற்றின்பம் என்று கூறுவார்கள். அன்புடைய மனைவியும் கணவனும் ஒத்த மனத்தினராய் கூடித் துய்க்கும் இன்பம், ஐம்பொறி இன்பங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில் இந்த இன்பத்தை நன்கு கூறுகிறார், கணவன் ஒருவன் தான் அடைந்த இன்பத்தைத் தன்னுடைய மனைவியின் மேல் சார்த்திக் கூறுவதாகத் திருவள்ளுவர் ஒரு குறட்பாவைக் கூறியுள்ளார். அந்தக் குறட்பா இது. 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டோடி கண்ணே உள.

66

கண்ணால் கண்டும் காதால் கேட்டும் வாயினால் சுவைத்தும் மூக்கினால் முகர்ந்தும் உடம்பினால் உணர்ந்தும் அடையப்பெறுகின்ற ஐம்புல இன்பம் ஒள்ளிய தொடியணிந்த இந்த மங்கையிடத்தில் உள்ளன என்பது இந்தக் குறளின் பொருள்.

திருவள்ளுவர் கூறிய இதே கருத்தை இவருக்குப் பின்னர் சில நூற்றாண்டு கழித்து இருந்தவரான நம்மாழ்வார் தம்முடைய திருவாய் மொழியில் கூறுகிறார்.

66

‘கண்டு கேட்டு உற்று மோந்து உண்டுழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவிலாச் சிற்றின்பம்

என்று நம்மாழ்வார் கூறுகிறார்.* (**திருவாய் மொழி. 4-ஆம் பத்து. 9-ஆம் திருமொழி. 10-ஆம் செய்யுள்) இதை இவர் அளவிலாச் சிற்றின்பம் என்று கூறுவது காண்க.

இந்த ‘அளவிலாச் சிற்றின்பம்’ ஆண்மகனுக்கு மட்டுமா கிடைக் கிறது? அவன் அனுபவித்த அளவிலாச் சிற்றின்பம் அவளுக்கும் * தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள் (பேரா. நா. வானமாமலை மணிவிழா மலர் - 1978) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.