உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

முன்னுலகம் உண்டுமிழ்ந்தாய்க் கவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதன்றே என்னே!

-

திருமாலே! செங்கண் நெடியானே! எங்கள்

பெருமானே! நீ இதனைப் பேசு.

2

தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்

தானே தவவுருவும் தாரகையும் - தானே

எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத் திருசுடரு மாய இறை.

3

இறையாய் நிலனாகி எண்திசையும் தானாய்

மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான் உள்ளத்தி னுள்ளே உளன்.

4

தாழ்சடையும் நீள்முடியும் ஒள்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும் திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு இரண்டுருவ மொன்றா யிசைந்து.

5

இனியவன் மாயன் எனஉரைப்ப ரேலும்

இனியவன் காண்பரிய னேலும்

-

இனியவன்

கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்

உள்ளத்தி னுள்ளேஉளன்.

அதுநன் றிதுதீதென் றையப்ப டாதே

மதுநின்ற தண்துழாய் மார்வன் -பொதுநின்ற பொன்னங் கழலே தொழுமின் முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து.

உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி வைத்தவனை நாடி வலைப்படுத்தேன்

-

மெத்தெனவே

நின்றான் இருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து

பொன்றாமை மாயன் புகுந்து.

அலரெடுத்த உந்தியான் ஆங்கெழி லாய

மலரெடுத்த மாமேனி மாயன் - அலரெடுத்த

வண்ணத்தான் மாமலரான் வார்சடையான் என்றிவர்கட் கெண்ணத்தா னாமோ? இமை.

9

00

6

7