உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

தேவராய் நிற்கும்அத் தேவும்அத் தேவரில் மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும் யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாம் கடை.

உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி

செயல்தீரச்

சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறுசமயப்

பந்தனையார் வாழ்வேல் பழுது.

தமராவார் யாவர்க்கும் தாமரை மேலாற்கும் அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்

தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி மால்வண்ணன் தாள்தா மரையடைவோ மென்று.

இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை

-

இனியறிந்தேன்

காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ நற்கிரிசை

நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.

7

00

9

10

கீழ்க்கண்ட செய்யுட்கள் திருமழிசையாழ்வார் இயற்றிய

திருச்சந்த விருத்தத்திலிருந்து எடுத்தவை:-

பூநிலாய ஐந்துமாய்ப் புனற்கண் நின்ற நான்குமாய்

தீநிலாய முன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய் மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்

நீநிலாய வண்ணம்நின்னை யார்நினைக்க வல்லரே.

1

ஒன்றிரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய் ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய் ஒன்றிரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே

ஒன்றிரண்டு கண்ணினானும் உன்னைஏத்த வல்லனே.

2

விண்கடந்த சோதியாய் விளங்குஞான மூர்த்தியாய் பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே

எண் கடந்த யோகினோ டிரந்துசென்று மாணியாய்

மண்கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.

3